Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கீர்த்தி சுரேஷின் ஓடிடி ரிலீஸ் பற்றி வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கீர்த்தி சுரேஷின் ஓடிடி ரிலீஸ் பற்றி வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

vinoth

, செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (14:45 IST)
கேஜிஎப், காந்தாரா உள்பட சூப்பர் ஹிட் படங்களை எடுத்த ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ரகுதாத்தா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பேமிலி மேன் உள்ளிட்ட தொடர்களுக்கு கதை எழுதிய சுமன் குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் மற்றும் டிமாண்டி காலணி 2 ஆகிய படங்களோடு ரிலீஸானது.

தங்கலான் மற்றும் டிமாண்டி காலனி 2 ஆகிய படங்களுக்கு மத்தியில் ரிலீஸான இந்த திரைப்படத்துக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் குறைவான தியேட்டர்களிலேயே ரிலீஸானது.

இந்த படம் மோசமான விமர்சனங்களைப் பெறவில்லை என்றாலும் தங்கலான் மற்றும் டிமாண்டி காலணி 2 படங்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பால் இந்த படம் கவனிக்கப்படாமல் போனது. இந்நிலையில் ரகுதாத்தா திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் 13 ஆம் தேதி ஜி 5 தளத்தில் 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் அடுத்த பட ஒளிப்பதிவாளர் இவர்தான்… எப்போது ஷூட்டிங்?