Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

Advertiesment
Land Seize

Prasanth K

, வெள்ளி, 13 ஜூன் 2025 (14:05 IST)

40 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டு துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவதாக திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகேசன் என்பவர் தன்னை மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட நபர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

 

 கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்க சொக்கவேல் என்பவர், தனக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் முருகேசன் என்பவர் அபகரித்துக் கொண்டதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அழித்து உள்ளார். அதில் தன் அப்பா பெயரில் இருந்த 40 ஏக்கர் நிலத்தில் பாகம் கேட்டு தனது மகள் தாமரை என்பவர், கடந்த 2010 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், இந்த வழக்கில் ஆலோசனை கேட்பதற்காக தான் வழக்கறிஞர் முருகேசன் என்பவரை நாடியதாக அந்த புகார் மனுவை குறிப்பிட்டுள்ளார். 

 

வழக்கில் வெற்றி பெறுவதற்கு முதற்கட்டமாக உங்களிடம் இருக்கும் சொத்துக்களை தன் பெயருக்கு பெயர் மாற்றம் செய்து தருமாறு கேட்டதாகவும், வழக்கறிஞர் முருகேசன் கேட்டு வழக்குக்கான தொகை தன்னிடம் இல்லாததால் தன்னுடைய சொத்து பத்திரங்களை அவரது பெயருக்கு தற்காலிகமாக மாற்றி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். நீதிமன்றம் தீர்ப்பு,  வந்த பிறகு மீண்டும் தனது 40 ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு மாற்றித் தருமாறு வழக்கறிஞர் முருகேசன் இடம் தான் கேட்டதாகவும், ஆனால் பத்திரத்தை தன் பெயருக்கு மாற்றாமல் தொடர்ந்து மிரட்டி வருவதாக அவர் தனது புகார் மனுவில் கூறியுள்ளார். 

 

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தனது 40 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டபோது துப்பாக்கியை காண்பித்து மிரட்டுவதாக அவர் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்து உள்ளார்.  இது குறித்து வெள்ளக்கோயில் காவல் நிலையம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் என கடந்த பல மாதங்களாக புகார் அளித்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!