Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீரென கூலி படத்தின் டைட்டிலில் மாற்றம் செய்த படக்குழு…!

Advertiesment
Anirudh

vinoth

, வெள்ளி, 27 ஜூன் 2025 (12:46 IST)
ஜெயிலர் மற்றும் வேட்டையன் ஆகிய ஹிட் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்துக்கு இந்தி தவிர அனைத்து மொழிகளிலும் ‘கூலி’ என்றே டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது இந்தி பதிப்புக்கும் ‘கூலி தி பவர் ஹவுஸ்’ என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. இதை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதம் தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன்… ராம் போன்ற இயக்குனர் தமிழ்நாட்டிற்குத் தேவை- இயக்குனர் பாலா!