Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு.. கலந்தாய்வு எப்போது?

Advertiesment
Engineering

Mahendran

, வெள்ளி, 27 ஜூன் 2025 (13:23 IST)
தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இந்தப் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இந்த ஆண்டு 145 மாணவர்கள் முழு மதிப்பெண்களான 200-க்கு 200 கட் ஆஃப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
 
மொத்தம் 2.41 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது கிடைக்கிறது. மாணவர்கள் தங்கள் தரவரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் சரிபார்த்துக்கொள்ளலாம்.  
 
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். பொதுப்பிரிவில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகஸ்ரா மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்திகா இரண்டாம் இடத்தையும், அரியலூரைச் சேர்ந்த அமலன் ஆன்டோ மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். 
 
கலந்தாய்வு தேதிகள் குறித்து, பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19 வரை நடைபெறும். சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி ஜூலை 11 ஆம் தேதி வரை நடத்தப்படும். துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறும் என அமைச்சர் மேலும் விளக்கமளித்தார்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக கூட்டணிக்கு தவெக வரலாம்.. ஆனால் ஈபிஎஸ் தான் முதல்வர்: ராஜேந்திர பாலாஜி