அண்மையில் மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட் அடித்த படம் "ஐயப்பனும் கோஷியும்". இந்த படத்தை சச்சி இயக்கியிருந்தார். இதில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மலையாள சினிமாவில் இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இப்படத்தின் இயக்குனர் சச்சி உயிரிழந்துள்ளார். கடந்த 15ம் தேதி இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் 16-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திரிச்சூர் ஜூப்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்துள்ளார். இயக்குனர் சச்சியின் இந்த மறைவு மலையாள திரையுலகினரை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங், தமிழில் நடிகரும் மருத்துவருமான சேது இப்பொழுது இயக்குனர் சச்சி என தொடர்ந்து பல நல்ல மனிதர்கள் மரணித்து வருவதால் இந்த வருடம் யாருக்கும் பிடிக்கலை.