Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரொம்ப ஆட வெச்சிடாதீங்க.. ஸ்பேர் பார்ட்லாம் கழண்டுடும்! - சாண்டியிடம் சொன்ன ரஜினிகாந்த்!

Advertiesment
Coolie Release date

Prasanth K

, ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (11:29 IST)

ரஜினிகாந்த் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள கூலி படத்தின் ஆடியோ வெளியிடப்பட்ட நிலையில் அதில் ரஜினிகாந்த் பேசியது வைரலாகியுள்ளது.

 

ஆகஸ்டு 14ம் தேதி வெளியாக உள்ள கூலி படத்தில் ரஜினிகாந்துடன், நாகர்ஜூனா, ஆமிர் கான், உபேந்திரா, சத்யராஜ், ஷ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று கூலி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியான நிலையில் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த படத்தில் முன்னதாக வெளியான சிட்டுக்கு சிட்டுக்கு பெரும் வைரல் ஆனது. அந்த பாடலில் ரஜினியின் டான்ஸை சாண்டி மாஸ்டர்தான் கொரியோக்ராப் செய்துள்ளார். அப்போது நடந்த சம்பவம் குறித்து ரஜினிகாந்த் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது அவர் “சாண்டி மாஸ்டர் தலைவா தூள் கிளப்பிடலாம்னு சொல்லிக்கிட்டே என்கிட்ட வந்தார். நான் அவர்கிட்ட நான் 1950 ரக மாடல். பல லட்சம் கிலோ மீட்டர் ஓடுன வண்டி. ஸ்பேர் பார்ட்ஸ்லாம் மாத்தி இருக்காங்க. ரொம்ப ஆட வெச்சிடாதீங்க, ஸ்பேர் பார்ட்ஸ்லாம் கழண்டுடும்னு சொன்னேன்” என நகைச்சுவையாக பேசியுள்ளார்.

 

சாண்டி மாஸ்டர் கொரியோக்ராப் செய்த அந்த பாடலில் ரஜினி கடினமான ஸ்டெப்ஸ் இல்லாவிட்டாலும் சின்ன ஸ்டெப்ஸையே தனக்குரிய ஸ்டைலில் ஆடியிருக்கிறார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜியிடம் புகார் அளித்த வழக்கறிஞர்..!