இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா அணி இங்கிலாந்துக்கு 374 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்த இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 396 ரன்கள் குவித்தது. இதில் கடைசி நேரத்தில் வாஷிண்டன் சுந்தர் 53 ரன்கள் அடித்து, இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 247 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது, 374 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வரும் இங்கிலாந்து அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் தேவை. கையில் 9 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும்.
இந்த நான்காம் நாள் ஆட்டம், போட்டியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்பதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவான விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியைத் தங்கள் பக்கம் திருப்ப முயற்சிப்பார்கள்.