Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் தவா‌ங் பயண‌ம்!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (17:06 IST)
இ‌ந்‌திய- ‌சீன எ‌ல்லை‌‌யி‌ல் உ‌ள்ள அருணாசல‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ன் தவா‌ங் பகு‌தி‌க்கு ம‌த்‌திய‌ப் பாதுகா‌‌ப்பு அமை‌ச்ச‌ர் ஏ.கே.அ‌ந்தோ‌ணி வரு‌கிற 6ஆ‌ம் தே‌தி செ‌ல்லவு‌ள்ளா‌ர்.

அமை‌ச்ச‌ர் ஏ.கே.அ‌ந்தோ‌ணியுட‌ன் ராணுவ‌த் தலைமை‌த் தளப‌தி ‌தீப‌க் குமா‌ர், பாதுகா‌ப்பு‌ச் செயல‌ர் ‌விஜ‌ய் ‌சி‌ங் ஆ‌கியோ‌‌ர் உ‌ள்‌ளி‌ட்ட உயர‌திகா‌ரிகளு‌ம் தவா‌ங் செ‌ல்‌கி‌ன்றன‌ர். இவ‌ர்களை அருணாசல‌ப் ‌பிரதேச முத‌ல்வ‌ர் டோ‌ர்‌ஜி க‌ண்டு வரவே‌ற்‌கிறா‌ர்.

இ‌ந்த‌ப் பயண‌ம் மு‌ற்‌றிலு‌ம் பாதுகா‌ப்பு தொட‌ர்பானது எ‌‌ன்று அருணாசல‌ப் ‌பிரதேச அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர். சா‌ப்ப‌ர் பகு‌தி முத‌ல் டெ‌ங்கா பகு‌தி வரை உ‌ள்ள மு‌க்‌‌கிய ராணுவ முகா‌ம்களு‌க்கு ஹெ‌லிகா‌ப்ட‌ர் மூல‌ம் அ‌‌ந்தோ‌ணி செ‌ல்லவு‌ள்ளதாகவு‌ம் அவ‌ர்க‌ள் கூ‌‌றினர்.

அருணா‌ச்சல ‌பிரதேச ஆளுந‌ர் ஜெ.ஜெ.‌சி‌ங் கட‌ந்த வார‌ம் தவா‌ங் பகு‌தி‌க்கு வ‌ந்து இ‌ந்‌திய- ‌சீன‌ எ‌ல்லை‌ப் பகு‌திக‌ளி‌ல் சு‌ற்று‌ப்பயண‌ம் செ‌ய்த ‌நிலை‌யி‌ல், த‌ற்போது அமை‌ச்ச‌ர் ஏ.கே.அ‌ந்தோ‌ணி‌யி‌ன் வருகை மு‌க்‌கிய‌த்துவ‌ம் பெறு‌கிறது.

இ‌ந்‌திய- ‌ சீன எ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் தவா‌ங்‌ மு‌க்‌கிய‌ப்ப‌ங்கு வ‌கி‌க்‌கிறது. இ‌ப்பகு‌தியை த‌ங்க‌ளுடையது எ‌ன்று அ‌றி‌வி‌த்தா‌ல் அருணாசல‌ப் ‌பிரதேச‌த்தை இ‌ந்‌‌தியா‌வி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ந்த பகு‌தி எ‌ன்று அ‌ங்‌கீக‌ரி‌க்க‌த் தயாராக உ‌ள்ளதாக ‌சீனா கூ‌றியு‌ள்ளது. ஆனால‌் இத‌ை இ‌ந்‌தியா தொட‌ர்‌ந்து மறு‌த்து வரு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

Show comments