Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வித்தியாசம் வெறும் 20 லட்சம் ஓட்டுதான்!.. அனத்தாம இருங்க!.. தவெகவை கலாய்க்கும் திமுகவினர்!...

Advertiesment
vijay stalin
தமிழகத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவானது. இதனையடுத்து விஜயால்தான் இவ்வளவு வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இது முழுக்க முழுக்க விஜயின் அலை.. முதல் நிலை வாக்காளர்களும், இளைஞர்கள் பலரும் விஜயின் விசில் சின்னத்தில்தான் வாக்களித்திருக்கிறார்கள்.

கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஒரு கேம் சேஞ்சராக இருப்பார். விஜய் ஆட்சி அமைக்க கூட வாய்ப்புண்டு.. திமுக தோற்றுப் போகும் என்றெல்லாம் தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் இதை திமுக ஆதரவாளர்கள் மறுக்கிறார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் புள்ளிவிபரம் இதுதான்:

2021ம் வருடம் பதிவான மொத்த ஓட்டு 6.29 கோடி.. 2026-ல் பதிவான மொத்த ஓட்டு 5.7 3 கோடி. SIR-ல் 56 லட்சம் ஓட்டுகளை தூக்கிட்டாங்க..

2021-ல் விழுந்த மொத்த ஓட்டுகள் 4.63 கோடி
2026-ல் விழுந்த மொத்த ஓட்டுகள் 4.83 கோடி

வித்தியாசம் வெறும் 20 லட்சம் ஓட்டுகள் மட்டுமே. அதுலயும் முதல் நிலை வாக்களர்கள் 10 லட்சம் வாக்களித்திருப்பார்கள். மீதியிருக்கும் 10 லட்சம் ஓட்டுதான அதிகமாக பதிவான வாக்குகள்.

202ம் வருடம் கொரனோல பயந்து வாக்களிக்காம விட்ட கணக்குலாம் பாத்தா கிட்டதட்ட அதே ஓட்டுதான். எனவே, 20 லட்சம் ஓட்டெல்லாம் விஜய் அலை என சொல்ல முடியாது.  விஜய் ஃபேன்ஸ் போய் அனத்தாம இருங்க.. மே 4ம் தேதி திரும்ப வாங்க’ என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் எவ்வளவு வாக்குகளை வாங்குவார்?.. திமுக மீண்டும் ஆட்சி அமைக்குமா?.. ஒரு அலசல்..