Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே 1ம் தேதி முதல் வெயில் கொளுத்தும்!.. பிரதீப் ஜான் எச்சரிக்கை..

Advertiesment
sun
பொதுவாக வெயில் காலம் தொடங்கி விட்டாலே வெயில் சுட்டெரிக்கும். ஏப்ரல், மே மாதங்கள் கோடைகாலமாக இருந்தாலும் தற்போது மாறிவரும் காலநிலை காரணமாக மார்ச் மாதம் முதலே வெயில் கொளுத்த துவங்கி விடுகிறது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டதால் வெயில் வழக்கம் போல் கொளுத்தி வருகிறது. வருகிற மே 4ம் தேதி தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. அதன்பின் சில வாரங்கள் மிகவும் அதிகமான வெயில் தாக்கம் இருக்கும்..

இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ள கருத்தில் ‘மே 1ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் கடுமையான வெயில் கொளுத்தும். உள் தமிழகம், தென் மற்றும் மேற்கு தமிழகத்தில் மே 1 அல்லது இரண்டாம் தேதி மழை மீண்டும் தொடங்கும்.

ஆந்திர எல்லைக்கு அருகில் உள்ள சென்னை மற்றும் சுற்றிய மாவட்டங்களில் கடும் வெயில் தாக்கம் இருக்கும். மே 1 அல்லது 2ம் தேதி முதல் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்’ என அவர் கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2026-2027-ஆம் கல்வியாண்டில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் மும்மொழி கட்டாயம்: தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்படுமா?