Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்யாணம் பண்ணாமலேயே குழந்தை!.. சத்யராஜ் பொண்ணு திவ்யா வேறலெவல்!...

Advertiesment
dhiyva
சத்யராஜின் மகன் திவ்யா. இவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். சென்னையில் ஊட்டச்சத்து மருத்துவமனையும் நடத்தி வருகிறார்.  இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா தொடர்ந்து ஊட்டச்சத்தை தொடர்பான அறிவுரைகளை கூறிவந்தார். திடீரென தன்னை திமுகவிலும் திவ்யா இணைத்துக் கொண்டார். அங்கு அவருக்கு பதவியும் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். இன்ஸ்டாகிராமில் மட்டுமல்லாமல் திமுக மேடைகளிலும் விஜயை விமர்சித்து பேசி வந்தார். அதேநேரம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திவ்யாவுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஒருபக்கம் திமுகவுக்கு ஆதரவாக திவ்யாவின் அப்பா சத்யராஜும் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய திவ்யா ‘ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்பதற்காக ஒன்னா இருக்கக் கூடாது. அவங்களுக்குள்ள காதல் இருக்கணும்.. எனக்கு ஜாதகம் பார்த்து ஒரு மாதத்தில் நடக்கிற கல்யாணத்து மேல நம்பிக்கை இல்லை.. ஒருத்தருக்கு ஒருத்தர் புடிச்சிருந்தா யார் கூட வேணா போய் வாழலாம்.. சேர்ந்து கூட வாழணும்னு இல்ல.. அவங்கவங்க வீட்ல கூட வாழலாம்.. கல்யாணம் பண்ணாம குழந்த பிறக்கிறது கூட எனக்கு சம்மதம்தான்’ என அதிரடியாக பேசியிருக்கிறார். திவ்யாவின் அப்பா சத்யராஜ் ஒரு பெரியாரிஸ்ட். தனது திரைப்படங்களில் நிறைய முற்போக்கு மற்றும் பகுத்தறிவு கருத்துக்களை காமெடி மூலம் சொல்லியவர். தற்போது அவரின் மகளும் பகுத்தறிவாதியாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கச்சா எண்ணெய் மட்டுமல்ல.. பாமாயிலும் தட்டுப்பாடு: இந்தியாவில் விலைவாசி உயரும் அபாயம்!