Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் சில தொகுதிகளில் மறுவாக்குபதிவு உண்டா?.. தேர்தல் ஆணையம் பதில்!..

Advertiesment
tn election
2026 சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் நடந்து முடிந்திருக்கிறது. 75,064 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வாக்களித்துள்ளனர். காலை 7 மணி முதலே எல்லா வாக்குச்சாவடிகலிலும் பொது மக்கள் மிகவும் ஆர்வமுடன் இருந்து வாக்களித்தனர். பல தொகுதிகளிலும் மாலை ஆறு மணிக்கு மேல் வாக்குப்பதிவு நடந்தது. அதாவது ஆறு மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு ஓட்டு போட அனுமதி கொடுக்கப்பட்டது. சின்ன சின்ன சலசலப்புகளைத் தவிர இந்த சட்டமன்றத் தேர்தலில் பெரிதாக எங்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தேர்தல் மிகவும் அமைதியாகவும், சுமூகமாகவும் நடந்து முடிந்திருக்கிறது..

ஒருபக்கம் சில தொகுதிகளில் திமுகவினர் அராஜகம் செய்ததாக தவெகவின் புகார் சொன்னார்கள். சில இடங்களில் சிலர் கள்ள ஓட்டு போட முயற்சி செய்ததாகவும் சொல்லப்பட்டது. குறிப்பாக விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நடந்த 23ம் தேதி இரவு ஒரு மணியளவில் ம் திமுக நிர்வாகிகள் சிலர் காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன்  சென்றதாகவும் போலீசாரின் துணையோடு கள்ள ஓட்டு போட முயற்சி செய்ததாகவும், திடீரென ஆம்புலன்ஸ் வந்ததாகவும் வாக்கு எந்திரங்களை மாற்ற முயற்சி செய்ததாகவும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று சண்டையிட்டனர். அதன்பின் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டது..

எனவே, சில தொகுதிகளில் மறுவாக்குபதிவு நடைபெறுமா என்கிற கேள்வி பொதுமக்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் இது பற்றி விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம் தமிழக தேர்தலில் மொத்தமுள்ள 75 ஆயிரத்து 64 வாக்கசாவடிகளில் எதிலும் மறுவாக்கு பதிவு இல்லை.. வாக்கு பதிவு சுமூகமாக நடைபெற்றதால் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியம் இல்லை’ என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் கொடைக்கானல் போனதுக்கு பின்னாடி ஒரு செண்டிமெண்ட் இருக்கு!.. இதான் மேட்டரா?..