Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 16 முதல் நர்சிங், பார்மசி விண்ணப்பம்!

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (11:45 IST)
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி. பட்டப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் ஜூலை 16-ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.

இதன்படி இவ்விண்ணப்பங்கள் சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் மதுரை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, தூத்துக்குடி , தேனி, வேலூர் மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு பிசியோதெரபி- மறுவாழ்வு மருத்துவக் கல்லூரி (திருச்சி), சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களிலும் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும்.

தகவல் குறிப்பேட்டுடன் வழங்கப்படும் இவ்விண்ணப்பங்களை ஜூலை 30-ஆம் தேதி மாலை 3 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களை அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் 'செயலர், தேர்வுக் குழு, மருத்துக் கல்வி, 162, பெரியார் ஈ.வெ.ரா. சாலை, கீழ்பாக்கம், சென்னை' என்ற முகவரியை அணுகிப் பெறலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

கனடா பிரதமர் ராஜினாமா? அடுத்த பிரதமராக போகும் தமிழர்! - யார் இந்த அனிதா ஆனந்த்?

ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் தங்கம்.. இன்றைய நிலை என்ன?

சென்னை பக்கத்துல இப்படி ஒரு இடமா? முட்டுக்காட்டில் சூப்பரான படகு ஹோட்டல் தொடக்கம்!

Show comments