Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவீன மின் விளக்கிற்கு வரி குறைப்பு!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (13:44 IST)
ச‌ண்டிக‌ர் : குறைந்த அளவு மின் செலவு, வெபபம் வெளியிடாத காம்பாக்ஸ் புளோரசான்ட் லாம்ப் என்று (சி.எல்.எப்.) மின் விளக்குகளுக்கான மதிப்பு கூட்டு வரியை 12.5 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடாக பஞ்சாப் மாநில அரசு குறைக்க உள்ளது.

இந்த மாநில அமைச்சரவை‌க் கூட்டம் நேற்று முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் நடந்தது. இதில் நவீன மின் விளக்கு, மென்தால் எண்ணெய், நெய், சுவை பால், பெருங்காயம் ஆகியவற்றின் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) வரியை 12.5 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடாக குறைப்பது என்று முடிவெடுத்தது.

திரை அரங்குகள், மல்டிபிளக்ஸ் எனப்படும் நவீன திரை அரங்குகளுக்கும் கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிப்பத ு; அமிர்தசரசில் உள்ள ஹர்மந்தர் சாகிப், ஸ்ரீ தர்பார் சாகிப் ஆகிய வழிபாட்டு தலங்களுக்கு விற்பனை செய்யும் பொருட்கள் அல்லது இவற்றில் இருந்து வாங்கும் பொருட்களுக்கு மதிப்பு கூட்டு வரியில் இருந்து விலக்கு அளிப்பது; தாபா என்று அழைக்கப்படும் சிற்றுண்டி நிலையங்களுக்கு தொகுப்பு வரி விதிப்பத ு ;

இரும்பு, உருக்கு, சாயம் மற்றும் இரசயான பொருட்கள், கழிவு பஞ்சு, நூல் ஆகியவைகளுக்கு நுழைவு வரி விதிக்க 2000ஆம் வருட பஞ்சாப் உள்ளூர் பகுதி பொருட்கள் சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்வது என முடிவெடுக்கப்பட்டதாக மாநில அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments