Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் தக்க வைக்க ஸ்டாலின் எடுக்கும் கடைசி முயற்சி.. சோனியாவிடம் நேரடி பேச்சுவார்த்தை?

Advertiesment
திமுக
தமிழக அரசியலில் வரவிருக்கும் தேர்தல் களம் ஒரு நான்கு முனை போட்டியாக உருவெடுத்துள்ளது. இதில் வெறும் நான்கு சதவீத வாக்குகள் கூட ஆட்சியின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை கொண்டவை என்பதை தி.மு.க தலைமை நன்கு உணர்ந்துள்ளது. தி.மு.கவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மத்தியில் 'காங்கிரஸ் விலகினாலும் பாதிப்பில்லை' என்ற எண்ணம் மேலோங்கி இருந்தாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மிகுந்த நிதானத்தையும் எச்சரிக்கையையும் கடைபிடிக்கிறார்.
 
மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் தலைவர்களின் அதிரடி பேச்சுக்கள் ராகுல் காந்தியின் மறைமுக ஆதரவுடனேயே வெளிவருகின்றன என்பது ஸ்டாலினுக்கு தெரியும். இதனால் கூட்டணி முறிந்துவிடுமோ என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், காங்கிரஸ் கேட்கும் 41 தொகுதிகள், உள்ளாட்சி மற்றும் அமைச்சரவையில் பங்கு போன்ற கடுமையான நிபந்தனைகளை ஏற்க அவர் தயாராக இல்லை. 
 
இந்த இக்கட்டான சூழலில் இருந்து கூட்டணியை காக்க, கடைசி முயற்சியாக மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ரேவந்த் ரெட்டி மூலமாக சோனியா காந்தியிடம் நேரடியாக பேசி சுமுகமான ஒரு சமரச தீர்வை எட்ட முதல்வர் திட்டமிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு பக்கம் மகளிர் உரிமைத்தொகை அட்வான்ஸ்.. இன்னொரு பக்கம் கிரிக்கெட் பேட்.. அதிமுக, திமுகவின் தேர்தல் உத்திகள்..!