Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

Advertiesment
mk stalin
தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் திமுக இதுவரை கூட்டணி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை துவங்கவில்லை. சமீபத்தில்தான் இது தொடர்பான குழுவை திமுக விரைவில் அமைக்கும் எனத்தெரிகிறது.

இந்நிலையில், வருகிற 23ம் தேதி கூட்டணி கட்சிகளுன் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை திமுக தலைமை துவங்குகிறது. ஒருபக்கம் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அல்லது ஆறு அமைச்சர் பதவி என்று பல கோரிக்கைகளை வைத்திருக்கிறது. இது திமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது..

எனவே இது எல்லாவற்றையும் வருகிற 23ஆம் தேதிக்கு பின் பேசப்படும் என தெரிகிறது. ஒருபக்கம்,  திமுக வழக்கம்போல் இந்த முறையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை, மதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவுள்ளது.

பேச்சுவார்த்தையில் முதலாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் கலைஞர் கருணாநிதி காலம் முதலே கூட்டணி பேச்சு வார்த்தை முதலில் இந்திய முஸ்லீம் கட்சியோடுதான் திமுக தொடங்கும். அதன் பிறகே மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்கிறார்கள்..

2021 சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த மூன்றிலும் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.. அதேநேரம் இந்த முறை 5 தொகுதிகளை கேட்க இந்திய முஸ்லிம் லீக் திட்டமிட்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..