Publish Date: Wed, 18 Feb 2026 (11:26 IST)
Updated Date: Wed, 18 Feb 2026 (11:28 IST)
தம்பிதுரை, ஜிகே வாசன், என்.ஆர் இளங்கோ, திருச்சி சிவா, செல்வராஜ், கனிமொழி சோமு ஆகியோர் தமிழக எம்பிக்களாக இருக்கிறார்கள். இவர்களின் பதிவு காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில்தான், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 எம்பி பதவிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது..
இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5ம் தேதி கடைசி நாள் என சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும், வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ம் தேதியும் கடைசி நாளாகும்.. இறுதியாக மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.. தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் திமுக 4 எம்பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..