Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீரகம் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (17:17 IST)
சீரகம் அதிகளவு ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இதன் விலையும் அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் சிரியா அதிகளவு சீரகம் உற்பத்தி செய்வதுடன், ஏற்றுமதியும் செய்து வருகிறது. இந்த வருடம் சிரியா உட்பட சீரகம் அதிகளவு உற்பத்தி செய்யும் நாடுகளில் உற்பத்தி குறைந்துள்ளது. குறிப்பாக சிரியாவில் சீரக உற்பத்தி 30 விழுக்காடு குறைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் சீரகத்தின் விலை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இந்த வருடம் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான 8 மாதங்களில் 16,250 டன் சீரகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.172 கோடியே 75 லட்சம். இந்த வருடம் சராசரியாக 1 கிலோ ரூ.106.31 பைசா என்ற விலையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் 1 கிலோ ரூ.74.92 பைசா என்ற விலையில் ஏற்றுமதி செய்யப்பட்டது.

சீரகம் ஏற்றுமதி செய்யும் மற்ற நாடுகளில் உற்பத்தி குறைந்த காரணத்தினால், இதன் விலை அதிகரித்தது. இத்துடன் மற்ற நாடுகளில் உற்பத்தி குறைந்துள்ளதால் அந்த நாடுகள் ஏற்றுமதி செய்வதும் குறையும். இதனால் இந்தியாவில் இருந்து அதிகளவு ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சீரகத்தின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்திருப்பது, அத்துடன் ஏற்றுமதிக்கான வாய்ப்பு ஆகிய இரண்டு காரணங்களால் அடுத்த சில மாதங்களில் உள்நாட்டிலும் சீரகத்தின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீரகம் உற்பத்தி செய்யும் மற்ற நாடுகளில் சென்ற வருடமும் உற்பத்தி குறைந்தது. இதனால் இந்தியாவில் இருந்து இதற்கு முன் இல்லாத வகையில் அதிகளவு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன் இல்லாத வகையில் 26 ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டது (இதன் மதிப்பு ரூ.210 கோடியே 50 லட்சம ்).

இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் அதிகளவு சீரகம் பயிர் செய்யப்படுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் சீரகம் பயிரிடுவதற்கான தட்ப வெட்ப நிலை, நிலத்தின் நீர் வடியும் தன்மை, மண் வளம் சாதகமாக இருக்கின்றது. இதனால் இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த சீரகத்தில் இந்த இரு மாநிலங்களில் இருநதும் 90 விழுக்காடு உற்பத்தியாகிறது. இந்தியாவின் உள்நாட்டு பயன்பாட்டிற்கு வருடத்திற்கு 1 லட்சத்து 10 லட்சம் டன் சீரகம் தேவைப்படுகிறது.

இந்தியா தவிர்த்து மேற்கு ஆப்பிரிக்கா, ஈரான், இந்தோனேஷியா, சீனா, துருக்கி, சிரியா ஆகிய நாடுகளும் சீரகத்தை அதிகளவு உற்பத்தி செய்கின்றன. இவை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

Show comments