Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை!.. திறந்துவைக்கும் பிரதமர் மோடி!...

Advertiesment
aims hospital

Mahendran

, வியாழன், 5 பிப்ரவரி 2026 (15:45 IST)
மத்தியில் எப்போது பாஜக ஆட்சிக்கு வந்ததோ அப்போது முதலே தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித் தர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.. ஆனால் பல மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவும் மத்திய அரசு தமிழ்நாட்டை கண்டு கொள்ளவில்லை..

அதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் பாஜகவிற்கு மக்கள் வாக்களிப்பது இல்லை.. சில தேர்தலில் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளை பாஜக பெற்றது. எனவே தமிழகத்தில் முக்கிய திட்டங்களை கொண்டு வர பாஜக அரசு விரும்பவில்லை என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தது..

அதன்பின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவனை துவங்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது.. இதை கையிலெடுத்த திமுக தேர்தல் பிரச்சாரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித் தருவதாக சொல்லி தமிழகத்தை பாஜக ஏமாற்றிவிட்டதாக பிரச்சாரம் செய்தார்கள்..

குறிப்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செங்கல்லில் எய்ம்ஸ் என எழுதி ‘பார்த்துக் கொள்ளுங்கள்.. இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை’ என பல தமிழகத்தின் பல பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.. அது திமுகவுக்கு நல்ல பலனை கொடுத்தது. இந்நிலையில், வருகிற 28ம் தேதி மதுரைக்கு வரும் பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட சில கட்டணங்களை திறந்து வைக்கிறார்.. மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டவிருப்பதாக பாஜக தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் பரவுகிறதா பறவைக் காய்ச்சல்?!.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!...