Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சா பிரதமரை மாத்திடுவேன்!.. கிஷோர் ஆதங்கம்..

Advertiesment
narendra modi

Mahendran

, வியாழன், 5 பிப்ரவரி 2026 (14:15 IST)
2014ம் வருடம் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது. குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி கடந்த மூன்று முறையும் இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பாஜக ஆட்சிக்கு வந்த பின் பல அதிரடியான செயல்களில் இறங்கினார்கள்.. திடீரென ஒரு இரவில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்தார். இது இந்திய மக்களை கடுமையாக பாதித்தது.. குறிப்பாக பல தொழில்களும் முடங்கியது.. இதற்கு பல கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.. ஆனாலும் பாஜக அரசு அதை கண்டு கொள்ளவில்லை..

ஒருபக்கம் கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினர் மீது அதிகப்படியான தாக்குதல்கள் நடந்தன.. இதையும் பாஜக தலைமை தடுக்கவில்லை என புகார்கள் எழுந்தது. இதற்கும் பாஜக எந்த பதிலும் சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ் கொள்கையை பாஜக பின்பற்றுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் விமர்சனம் செய்தன.

மேலும் மோடி அதானி, அம்பானி போன்றவர்களுக்காகவே ஆட்சி நடத்துகிறார் என்று ராகுல் காந்தி வெளிப்படையாக புகார் சொன்னார்.. ஆனாலும் கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் இந்திய மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து நரேந்திர மோடியை பிரதமர் ஆக்கிவிட்டார்கள். எனவே, பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் கிஷோர் ‘வாழ்க்கையில் பின்னால் போகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் 2014 ஆம் ஆண்டு சென்று நான் பிரதமரை மாற்றி விடுவேன்.. இந்தியாவே மாறிவிடும். நாடு இப்போது ஆபத்தான நிலையில் இருக்கிறது. வெறுப்புணர்வு அதிகரித்திருக்கிறது. இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல வருடங்கள் ஆகும்.. வெறுப்பை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் ரொம்ப மிகவும் ஆபத்தானவர்கள்.. அன்பு இல்லை என்றால் இங்கு எதுவும் இருக்காது’ என தைரியமாக கருத்தை தெரிவித்து இருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரியார் சொன்னதை தான் நான் சொன்னேன்.. கமல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு..!