சமீபத்தில் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ் பிச்சை எடுக்கக் கூட உதவாது என பேசியிருந்தார். அதற்கு பாராளுமன்றத்திலேயே பதிலடி கொடுத்த கமல்ஹாசன் எம்.பி பிச்சைப் பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்துக்கு உதவாது என்று தெரிந்தவர் நீங்கள். நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள்.
ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான் என்று பதிலடி கொடுத்திருந்தார்.,
இதையடுத்து, நான் தமிழை இழிவுபடுத்தி பேசவில்லை. பெரியார் சொன்னதைத்தான் சொல்லியிருக்கிறேன் என விளக்கம் கொடுத்தார் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொன்ன வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மாநிலங்களவையில் கமல் பேசியது எனக்கு புரியவில்லை. உங்களுக்கு புரிந்ததா?.. அவர் பேசியது புரியாததால்தான் கோவை மக்கள் அவரை அனுப்பிவிட்டார்கள் என நக்கலடித்திருக்கிறார்.