தமிழ்.வெப்துனியா.காம ்: கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்து முடிந்துள்ளது. இது முடிந்த பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறும் என்ற ஒரு பேச்சு இருந்தது. இவ்வாறு தமிழக சட்டப் பேரவைக்கு கூடிய விரைவில் தேர்தல் நடைபெறும் சாத்தியம் இருக்கிறதா? ஜோதிடப்படி?
ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன ்: தமிழக சட்டப்பேரவை என்று பார்க்கும் போது, தமிழ், தமிழுக்குரிய கிரகம் என்றால் சந்திரன். சந்திரனுடைய வீடு கடகம். இந்தக் கடகத்தை குரு பார்க்கிறார். குரு அதிசாரத்தில் போய், தன்னுடைய 5ம் இடத்திலிருந்து கடகத்தை பார்க்கிறார். இவ்வாறு கடகத்தைப் குரு பார்க்கும் சமயத்திலெல்லம் தமிழ், தமிழ் உணர்வு இதெல்லாம் அதிகரிப்பதை நாம் பார்க்கிறோம். தமிழுக்கு செம்மொழி சிறப்பு கிடைத்ததை வைத்துப் பார்க்கும் போது, கடக வீடு பார்க்கும் போது இந்த மாதிரியான சிறப்பு அடைந்திருக்கிறது. இந்தச் செம்மொழி மாநாடும் குருவோட பார்வை கடகத்தின் மீது விழுவதுதான்.
இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது தமிழ் மாநிலம், அதனுடைய தேர்தல் என்பது தள்ளிப்போவதற்கு வாய்ப்புள்ளது. உடனடியாக, முன்கூட்டியே நடப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடையாது. இப்போதைக்கு இல்லை என்று சொல்லலாம். நவம்பர், டிசம்பரில் குரு மீண்டும் கும்பத்திற்கு வருகிறார். அந்த காலகட்டத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது.