Publish Date: Sat, 21 Feb 2026 (20:31 IST)
Updated Date: Sat, 21 Feb 2026 (20:34 IST)
திரைப்படத்துறையில் உதவி இயக்குனர், இயக்குனர், நடிகர் என வலம் வந்த சீமான் 16 வருடங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கினார்.
தமிழ் தேசியத்தை முன்வைத்து திராவிடத்திற்கு எதிராக அரசியல் செய்து வருபவர் சீமான்
வணக்கம் கடந்த அரசியல் கட்சி துவங்கியதில் இருந்து திமுக அதிமுக இரண்டு கட்சிகளில் மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார் சீமான்..
அதேபோல் கட்சி துவங்கியதிலிருந்து தற்போது வரை நாம் தமிழர் கட்சி அனைத்து தேர்தலிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டுயிட்டு வருகிறது. நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனியாகவே போட்டியிடவிருக்கிறது. இந்நிலையில்தான், திருச்சியில் இன்று நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான். அதில் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது..
அந்த மாநாட்டில் பேசிய சீமான் 5வது முறையாக ஒரு அரசியல் கட்சி எந்த சமரசமும் செய்யாமல் சீட்டுக்கும், நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நின்று தேர்தல் களத்தில் நிற்கிறது என்றால் அது இந்திய துணை கண்டத்தில் நாம் தமிழர் கட்சி மட்டுமே. தனித்துவத்தோடு இருக்கிறோம்.. தனித்த உயர்ந்த தத்துவத்தோடு இருக்கிறோம்.. இது ரசிகர் கூட்டம் அல்ல.. லட்சிய கூட்டம்.. திரை கவர்ச்சியா? இன எழுச்சியா?..
இதுவரை நாம் போட்டிட்ட எல்லா தேர்தலிலும் தோற்றோம். எங்களைப் பார்த்தால் அப்படி தெரிகிறதா அடிபட்ட புலி மட்டும் அல்ல.. அடிமைப்பட்ட இனமும் எழுந்து நிற்கும்.. 5 ஆயிரத்தை வாங்கும் என் அம்மாக்கள் கையில் இரண்டு லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது என்பதை அறிவு சமூகம் அறிய வேண்டும்.. இதை சிந்திக்க தொடங்கிவிட்டால் மாற்றத்திற்கான அரசியல் தொடங்கிவிட்டது என்று அர்த்தம் என சீமான் பேசியிருக்கிறார்..