Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் வருவார்.. நீங்களும் வாங்க.. தில் இருக்கா?!... முதல்வருக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா..

Advertiesment
vijay stalin

Mahendran

, சனி, 21 பிப்ரவரி 2026 (10:09 IST)
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வருகிற ஏப்ரலில் முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது.. எனவே குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வாங்கிவிட வேண்டும் என அந்த கட்சியை முடிவு செய்திருக்கிறது.. எனவே அதற்கு அதை நோக்கி காய்களை நகர்த்தி வருகிறது தவெக. அதேநேரம் தவெகவுடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை.. எனவே அக்கட்சி தனித்து போட்டியிடும் நிலை உருவாகியிருக்கிறது..

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் நேற்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த மேடையில் பேசிய தஎக தேர்தல் பிரச்சாரம் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ‘ எங்க தலைவர் விஜய் ஒரு துண்டு சீட்டு கூட இல்லாமல் பேசுவார்,.. ஆனால் அதேபோல் முதலமைச்சர் செய்வாரா?..

எங்க தலைவர் விஜய் செய்தியாளர்களை நேருக்கு நேர் சந்திக்க தயாராகவே இருக்கிறார்.. முக ஸ்டாலின் அதற்கு தயாரா?.. உங்களுக்கு அந்த தில் இருக்கா?.. என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் எங்கள் தலைவரும் வருவார்.. நீங்களும் வாருங்கள்.. மக்கள் முன்பு திறந்துவெளியில் விவாதிப்போம்’ என ஒரு முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்திருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்ப் போட்ட எல்லா வரியும் கேன்சல்!. ஆப்படித்த அமெரிக்கா உச்ச நீதிமன்றம்...