Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனநிலை மாற்றத்திற்குக் காரணம் என்ன?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

Webdunia
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

ஒரு திசையில் ஒரு புக்தியில் இன்னன்ன நடக்கும் என்று ஜோதிட அலங்காரம், சர்வார்த்த சிலங்காரம் போன்ற நூல்கள் எடுத்துச் சொல்கின்றன.

தசா புக்திகளைக் காட்டிலும் கோச்சார கிரக நிலைகளை, இன்றைய கிரக நிலைகள்தான் - அதாவது சுக்கிரன் புக்தி நடக்கிறது என்றால் அது மிக யோகமான நிலை. மிதுனம் அல்லது ரிஷப லக்னத்திற்கு எடுத்துக் கொண்டால் புதன் தசையில் சுக்கிர தசை ராஜ யோகத்தைத் தரக் கூடியது.

ஆனால் அது போல இருக்கும்போது நடுவில் அஷ்டம சனி, ஏழரை சனி, சகட குரு போன்றவை வரும்போது அந்த யோகப் பலன் ஒரு பக்கம் கொடுக்கப்பட்டாலும், அதை அனுபவிக்க முடியாத சில நிகழ்வுகளைக் கொடுக்கும்.

அதுதான் கோபத்தைக் கொடுக்கிறது. அதாவது நல்ல யோகம் இருந்தும் அதனை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

அதனால்தான் பிறக்கும்போது இருக்கும் கோள்களின் கிரக அமைப்பு யோகமானதா அல்லது தற்கால கிரக அமைப்பு நல்லதா என்பதை பார்த்து பலன் சொல்கிறோம்.

சிலருக்குப் பிறக்கும் போது இருக்கும் கிரக அமைப்பைக் காட்டிலும் தற்கால கிரக அமைப்பு வலுவாக இருப்பதால் அதன் பலன்கள்தான் அவர்களுக்கு நடக்கும்.

அதனால்தான் நல்ல தசாபுக்தி நடந்தாலும் திடீரென உணர்ச்சி வசப்படுதல், கோபப்படுதல் போன்றவைக்கு காரணம் அஷ்டமத்து சனி, ஏழரை சனி போன்றவை நடப்பதுதான்.

சந்திராஷ்டமம் என்று இரண்டரை நாள் நடக்கும். அந்த நாட்களிலும் கோபப்படுதல், எடுத்தெறிந்து பேசுதல், கையில் கிடைத்ததை எடுத்து அடித்தல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக் கொள்வது போன்றவையும் நடக்கும், அதாவது ஒரு இரண்டரை ஆண்டுகளுக்கு பட வேண்டிய கஷ்டம் அனைத்தையும் இந்த இரண்டரை நாட்களில் நாம் பட்டுவிடுவோம்.

தசா புக்தி மோசமாக நடப்பவர்களுக்கு, சந்திராஷ்டமம் மிக மோசமாக இருக்கும். எனவே அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொதுவாக விவாகரத்தை எடுத்துக் கொண்டால் ஒரே நாள் இரவில் சண்டை போட்டு கைகலப்பாகி, சூட்டோடு சூடாக வழக்கறிஞரைப் பார்த்து விவாகரத்திற்கு பதிவு செய்து விடுகிறார்கள்.

நமக்கு சந்திராஷ்டமம் நடக்கிறது. கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும் என்று நிதானித்து இருந்தால் அவர்கள் தப்பித்துவிடுவார்கள்.

அதேப்போன்றுதான், கொலைகள் நடப்பதையும் எடுத்துக் கொண்டால் ஒன்று கொலையுண்டவனுக்கு சந்திராஷ்டமமாக இருக்கும் அல்லது கொலை செய்தவனுக்கு சந்திராஷ்டமமாக இருக்கும்.

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம், அதாவது ரிஷப ராசிக்கு எட்டாம் ராசி தனுசு ராசி. தனுசு ராசியில் மூலம், உத்திராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகிய 3 நட்சத்திரங்களும் இருக்கும்.

அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொரு மாதமும் வரும். அந்த நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் மன உளைச்சல், கோபம் போன்றவை அதிகம் ஏற்படும்.

சந்திரன்தான் எல்லாவற்றிற்கும் உரியவன். மனசுக்கு உரியவன். செயல்பாடுகளை கட்டுப்படுத்துபவன். எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது எதிர்மறையான செயல்கள் அதிகரிக்கும்.

அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தை இயக்கும்போது பொறுமையை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.

ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதே லக்னத்திற்கு 8, 6, 12இல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments