Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது உண்மையா?.. தவெக சொல்வது என்ன?...

Advertiesment
vijay
கடந்த சில நாட்களாகவே தவெக அதிமுக - பாஜக கூட்டணியில் இணையப்போகிறது என்கிற செய்தி வெளியாகிவந்தது. ஆனால், இந்த செய்தியை பரப்புவதே திமுகதான் என தவெகவினர் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில், தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடி நிர்மல் குமார் எக்ஸ் தளத்தில் இதுபற்றி பதிவிட்டிருக்கிறார்.

வதந்திகளை நம்ப வேண்டாம்!

சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல்  தலைவர்களுடன் எந்தவிதமான  பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு  தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.

பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்!

வாய்மையே வெல்லும்!’ என பதிவிட்டிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக ஆட்சியை பிடிக்கும்!.. விஜய் வாக்குகளை பிரிப்பார்!.. கருத்துக்கணிப்பில் தகவல்!..