Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்டர்வியூவில் கேள்விகளும் பதில்களும்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (10:27 IST)
சிலர் எவ்வளவு கடினமான தேர்வு எழுத வேண்டுமானாலும் உற்சாகமாக எழுதுவார்கள். ஆனால் ஓரு நேர்முக தேர்வு என்று வரும் போது சிறிது கலக்கமும் மன உழைச்சலும் எழும்பும்.

என்ன பேசுவத ு, இதை சொல்லலாமா அல்லது எப்படி சொல்வது என்றெல்லாம் மனதில் ஒரு ஒத்திகையே நடத்திவிடுவார்கள். ஆனால் அவ்வாறான கேள்விகளுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை பற்றிய முக்கிய கருத்துக்களை சில நிபுணர்களிடமிருந்து பெற்று உங்களுக்கு அளிக்கிறோம்.

1. உங்களை பற்றிக் கூறுங்கள்...

இந்த மாதிரியான திறந்த வாய்ப்புள்ள கேள்விகளுக்க ு, உங்களை பற்றி அந்த அதிகாரிக்கு வேலை தொடர்பாக அறிய வேண்டிய முக்கிய ஐந்து காரியங்களை மட்டும் கூறலாம். நீங்கள் எங்கு பிறந்தீர்கள ், சிறு வயதில் என்ன செய்தீர்கள் போன்ற தேவையற்ற தகவல்களை தவிர்க்கலாம். உங்கள் படைப்புகள ், பழைய வேலையில் நீங்கள் செய்த சாதனைகள் போன்றவை தொடங்கி புதிய நிறுவனத்தில் உங்கள் திறமையின் பங்கு ஆகியவற்றை தெளிவாகவும ், உங்கள் முன்பிருப்பவருக்கு எந்த பிற கேள்விகளும் எழும்பாத விதத்திலும ், உண்மையான தகவல்களை அளிக்க வேண்டும். சுருங்க சொல்வோமானால ், உங்களை நீங்களே அந்த வேலைக்கு விளம்பரம் செய்யக்கூடியதாக உங்கள் பதில் காணப்பட வேண்டும்.

2. ஏன் நீங்கள் இந்த துறையை தேர்தெடுத்தீர்கள ்?

இந்த கேள்வியை அதிகாரி கேட்பதன் முக்கிய நோக்கத்தை நீங்கள் முதலில் உணர வேண்டும். நீங்கள் இந்த துறையை எடுத்துக்கொண்டதன் காரணம் மற்றும் உங்கள் ஆர்வத்தை பற்றி அறிவதற்கே ஆகும். ஆகவே இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கும் போத ு, உங்கள் முழு உற்சாகமும ், உள்ளமும் இந்த துறையின் மீது இருப்பதை பிரதிபலிக்கக்கூடியதாக உங்கள் பதில் இருக்க வேண்டும். மேலும ், அதை அதாரப்படுத்துவதற்காக அந்த துறையை சார்ந்த உங்கள் லட்சியத்தையும் கூறலாம்.

3. உங்கள் பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி.....

இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கும் போத ு, வேலை தொடர்பாக உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை கூறவும். பொதுவான வாக்கியங்களா ன, நான் ஒரு சிறந்த நண்பன் போன்றவற்றை தவிர்த்த ு, நான் எந்த சூழலுக்கும் ஏற்ப வளையக்கூடியவன் அல்லது ஒரு குழுவில் எல்லோருடனும் இணைந்து வேலை செய்யக்கூடியவன் போன்ற அலுவல் தொடர்பான கருத்துக்களை கூறலாம். அதேப் போல் உங்கள் பலவீனங்களை கூறும் போத ு, வேலை வாய்ப்பை இழக்கக்கூடி ய, " நான் முன்ப ு, காரியங்களை ஒழுங்கமைக்காமல் இருப்பேன். ஆனால் இப்போது அதை தவிர்ப்பதற்காக தினமும் என் காரியங்களை பட்டியலிட்டு ஒழுங்கமைக்கிறேன்" என்று விளக்கலாம்.

4. உங்கள் தற்போதைய வேலை அல்லது முந்தைய வேலையிலிருந்து ஏன் மாறிவிட்டீர்கள ்?

நீங்கள் எவ்வளவு தான் சிறப்பாக விளம்பரம் செய்தாலும ், இந்த ஒரு கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலிலேய ே, உங்கள் எதிர்கால வேலையில் எவ்வாறு விளங்குவீர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம். ஆகவே இந்தக் கேள்வியை அதிகாரி கேட்பதற்கான முக்கிய காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் பழைய நிறுவனத்தில் நீங்கள் அடைந்த கஷ்டத்தை கூறுவதால ், புது நிறுவன அதிகாரி உங்கள் மேல் இரக்கம் பாராட்ட போவதில்லை. ஆகவ ே, வாய்ப்பை இழக்காமல் இருப்பதற்கான தகுந்த காரணங்களா ன, உங்கள் மேல் படிப்ப ு, உங்கள் லட்சியத்தை அடைதல் போன்றவற்றை கூறலாம்.

5. எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள ்?

இந்தக் கேள்விக்கு நீங்கள் முன்பே ஒரு பதில ை, நீங்கள் செல்லும் நிறுவனத்தின் நிலை மற்றும் அதில் உங்கள் பங்க ு, நீங்கள் வேலை செய்யப்போகும் திட்டத்தின் அப்போதைய சந்தை நிலவரம் ஆகியவற்றை சார்ந்து அமைத்துக்கொள்ள வேண்டும். ஆகவே இதற்கு சில ஹோம் வொர்க் தேவைப்படுகிறது என்றாலும ், பணத்தை குறிக்கோளாகவே கொண்டு அந்த நிறுவனத்தின் வாய்ப்பை எதிர்ப்பார்க்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தாமல் எளிமையாகவும் நிதானமாகவும் அதிகாரியை அறியச் செய்யலாம்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments