Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2026-27 நிதியாண்டிற்கான தமிழக இடைக்கால பட்ஜெட்.. என்னென்ன முக்கிய அம்சங்கள்?

Advertiesment
budget

Siva

, செவ்வாய், 17 பிப்ரவரி 2026 (12:10 IST)
2026-27 நிதியாண்டிற்கான தமிழக இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் உள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்.
 
கல்வி: பள்ளிக் கல்வித்துறைக்கு மிக அதிகபட்சமாக ரூ. 48,534 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
ஓய்வூதியம்: அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்காக ரூ. 11,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
மகளிர் நலன்: விடியல் பேருந்து பயணத் திட்டத்திற்கு ரூ. 1,722 கோடியும், மகளிர் உரிமைத் தொகைக்காக ரூ. 6,500 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
 
மெட்ரோ ரயில்: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கு ரூ. 63,246 கோடி ஒதுக்கீடு; மதுரை, கோவை திட்டங்களை மத்திய அரசு நிராகரித்தது.
 
வீட்டு வசதி: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
சுகாதாரம்: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ. 22,090 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
மின்சாரம்: மாநிலத்தின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ. 18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
சுற்றுலா & பண்பாடு: அருங்காட்சியகங்களுக்கு ரூ. 285 கோடியும், நதிக்கரை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ. 374 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்தி அந்த பதவிக்கே லாயக்கற்றவர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் மனைவி கடும் தாக்கு..!