Publish Date: Mon, 16 Feb 2026 (15:24 IST)
Updated Date: Mon, 16 Feb 2026 (15:26 IST)
அரசியலுக்கு வந்துவிட்டாலே சொந்த வாழ்க்கையை பலரும் விமர்சனம் செய்வார்கள். தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் இந்த விமர்சனங்களை சந்தித்தவர்கள்தான். ஒருவரை கருத்தியல் ரீதியாக எதிர்க்கமுடியவில்லை என்றால் இப்படி சொந்த விஷயங்களை வைத்து விமர்சனம் செய்வது என்பது பல வருடங்களாகவே நடைமுறையில் இருக்கும் ஒன்று.
தர்க்கரீதியாக பேசாமல் தனிப்பட்ட தாக்குதலை பலரும் தொடுப்பார்கள். அரசியலுக்கு வந்தால் அதை சந்தித்தே ஆகவேண்டும். தற்போது அரசியலுக்கு வந்திருக்கும் விஜயும் இதிலிருந்து தப்பவில்லை. அவர் குடும்பத்துடன் இல்லை.. நடிகை திரிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார் என விஜயை பிடிக்காதவர்களும், திமுகவினரும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். குறிப்பாக சமூகவலைத்தளங்கலில் பலரும் இப்படி கீழ்த்தரமாக விஜயை விமர்சிப்பதுண்டு..
சமீபத்தில் கூட செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய் முதலில் திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும். குடும்பஸ்தான இருந்து அவர் அரசியலை நடத்தவேண்டும். அவரெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை என பேசியிருந்தார். இதற்கு தவெகவை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் மற்ற கட்சியினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.
இதற்கு நடிகை திரிஷாவும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை எனக்கூறினார். இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அரசியல் என வந்துவிட்டாலே குடும்ப உறுப்பினர்களை இழுத்துப்பேசி முட்டிச்சந்தில் நிற்கவைக்கும் நிலைதான் இருக்கிறது.. விஜய் அனைத்தையும் சமாளிக்க வேண்டும்.. இன்னும் பக்குவப்பட வேண்டும் என கூறியிருக்கிறார்.