Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் கெடுபிடி - கஷ்டத்தில் திரைத்துறை!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (19:01 IST)
உள்ளூரில் ஒரு படத்தை எடுப்பதற்குள் நாக்கு தள்ளிவிட ு‌கிறத ு நம்மூர் இயக்குனர்களுக்கு. எங்கு கேமரா வைத்தாலும் காக்கி சட்டை ரூல்சுடன் குறுக்கே வந்துவிடுகிறது.

விஷாலின் சத்யம் படத்தின் விமான நிலைய காட்சிக்கு இந்தியாவில் அனுமதி கிடைக்காமல் துபாய் விமான நிலையத்தில் குறிப்பிட்ட காட்சியை எடுத்தனர். விஜயகாந்தின் அரசாங்கம் படத்திற்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.

சென்னை மாநகருக்குள் காலை நேரத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்பது புதிய உத்தரவு. ராதாமோகனின் அபியும் நானும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்பட்டதுபோல், விஷ்ணுவர்தனின் சர்வம் படத்திற்கும் பாதிப்பு.

நேற்று காலை எலியட்ஸ் கடற்கரையில் படப்பிடிப்பிற்காக வந்தவர்களை புதிய உத்தரவை சொல்லி திருப்பி அனுப்பியது போலீஸ். இதனால், காலையில் நடக்கும் காட்சிகளை இரவு நடப்பதாக மாற்றி அமைக்க தீர்மானித்துள்ளாராம் விஷ்ணுவர்தன்.

சில காட்சிகளை மாற்றலாம். மெரீனாவில் சூரியன் உதிக்கும் காட்சியை எப்படி மாற்றுவது? உத்தரவை மறுபரிசீலனை செய்யுமா அரசு?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'புஷ்பா 2’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நீளமா? ‘இந்தியன் 2’ பார்த்தும் திருந்தலையா?

எலான் மஸ்க் என் ட்விட்டரை முடக்கினால் எனக்கு வெற்றி: சிவகார்த்திகேயன்..!

47 வயதில் திருமணம் செய்து கொண்ட ‘பாகுபலி’ நடிகர்.. மணமகள் டாக்டரா?

மீண்டும் இணையும் ராம் - ஜானு.. விரைவில் உருவாகிறது ‘96’ இரண்டாம் பாகம்..!

லஞ்சம் வாங்கியவரை கைது செய்யாமல் மாநகராட்சி பணியில் அமர்த்துவதா? அன்புமணி ராமதாஸ்..!

Show comments