தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதிபாண்டியனை நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பதற்றம் நிலவுகிறது.
கேரளாவின் கொல்லம் கடலில் கடந்த 10 நாட்களுக்கு முன் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் இருவர் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குமரி மாவட்ட மீனவ கிராமங்களில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சென்னையி்ல் இரு இடங்களில் நடந்த வங்கி்க்கொள்ளையில் தொடர்புடையவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். போலீசாருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியானதாக கூறப்படுகிறது. வேளச்சேரி அருகே இந்த பரபரப்பு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.
மின் கட்டணம் உயர்வு குறித்து முழு தகவலை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதில் 37 விழுக்காடு மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், சுமார் 28 ஆயிரத்து 500 சத்துணவுப் பணியாளர்களை நியமித்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று தெரிவித்துள்ள மதுரை உயர் நீதிமன்ற கிளை, அதுதொடர்பான அரசாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்யானந்தாவை நீக்குவதாக நேற்றிரவு அறிவித்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தா ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகக் கடலோரப்பகுதிகளையும் சென்னை, புதுச்சேரியையும் மிரட்டிய நீலம் புயல் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாமல் கரையைக் கடந்தது. மழையும் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவையில் அக்காள், தம்பி இரண்டு பேரையும் கடத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிறுவன் இன்று பலியானதையடுத்து அந்த பகுதியில் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
மருதுபாண்டியர் நினைவு தினத்தில் பாதுகாப்புக்காக இருந்த சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் இருவர் இன்று மதுரையில் தப்பி ஓடினர் அவர்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அரசியலுக்கு வருவது குறித்து உங்கள் நிலையை இப்போது தெரிவிக்கவில்லை என்றால், உங்களை கோழையாக நினைத்து விடுவார்கள் என்ற பேச்சுக்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், ''நான் பிச்சை எடுத்தாலும் எடுப்பேன், கோழையாக வாழ விரும்ப மாட்டேன்'' என கூறியுள்ளார்.