வகுப்பறையிலேயே மாணவர் ஒருவரால் ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள புனித மேரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் உமா மகேஸ்வரி. வயது 43.
இன்று காலை வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் முகமது இர்பான் என்ற மாணவன் ஆசிரியை உமா மகேஸ்வரியை கத்தியால் சரமாரியாகக் குத்தினான்.
பலத்த காயம் அடைந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.