தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்!
, புதன், 21 மார்ச் 2012 (13:49 IST)
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.வாக்கு எண்ணிக்கை முடிந்து முதல் சுற்றி அறிவித்த உடனேயே அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 4,300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.18
சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் முத்துச்செல்வி அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த வாக்கு மொத்த வாக்குகள் 94,977.
வெற்றி பெற்ற வேட்பாளரை விட மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். ஆனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் வெறும் 26,212 வாக்குகள் மட்டுமே பெற்றதால் டெபாசிட் தொகை இழந்தார்.இதேபோலத்தான் ம.தி.மு.க., தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ம.தி.மு.க வேட்பாளர் சதன் திருமலைகுமார் 20,681 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். இருந்தாலும் விஜயகாந்த் கட்சியை பின்னுக்கு தள்ளிய பெருமை ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதாவின் சவாலை ஏற்று போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி வேட்பாளர் முத்துகுமார் டெபாசிட் இழந்தோடு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் பெற்ற வாக்கு 12,144 மட்டுமே.
''
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டி விட்டனர்'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.ஆனால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தோ, ''சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, உழைப்புக்கும், பணத்துக்கு இடையே நடந்த போட்டியில் பணத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.