சங்கரன்கோவில் தொகுதியை மீண்டும் கைப்பற்றியது அ.தி.மு.க.
, புதன், 21 மார்ச் 2012 (13:28 IST)
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பசாமி காலமானத்தையொட்டி அங்கு கடந்த 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்றில் இருந்து கடைசி சுற்றான 18வது சுற்றுவரை அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வியே முன்னிலையில் இருந்து வந்தார்.இறுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 94,977.இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் 26,212 வாக்குகள் பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளார்.ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைகுமார் 20,681 வாக்குகள் பெற்று 3வது இடத்துக்கு சென்றுள்ளது.
விஜயகாந்தின் தே.மு.தி.க. வேட்பாளர் முத்துகுமார் 12,144 வாக்குகள் பெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெல்லவது என்பதெல்லாம் சகஜமப்பா!