தமிழக சட்டப்பேரவையில் இருந்து தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், தே.மு.தி.க. உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து விளக்கம் அளிக்க உரிமைமீறல் விசாரணைக்குழு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த விசாரணை குழு இன்று காலை கூடியது. அப்போது, விஜயகாந்த் தவிர தே.மு.தி.க. உறுப்பினர்கள் அனைவரும் உரிமைமீறல் விசாரணைக் குழுவிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஆனால் விஜயகாந்த் உரிமைக்குழு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, உரிமைக்குழு ஆய்வின் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்தை சஸ்பெண்ட் செய்து அவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு தே.மு.தி.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் அனைவரும் குண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து விஜயகாந்த்தை 10 நாள் சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.