1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கை துளிர் விடும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசுப் பணம் புரளும்.
ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பேசில் கம்பீரம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மையுண்டு. பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். சொந்தம்பந்தங்களுக்கு மத்தியில் மதிப்பு மரியாதை கூடும்.
வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படு. வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது நபர்களின் சந்திப்பு கிட்டும். பாக்கிகள் வசூலாகும்.
மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். கூட்டுத்தொழிலில் மகிழ்ச்சியுண்டு. உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீகள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கோபத்தையும், குறை கூறுவதையும் தவிர்த்தால் வெற்றி பெறும் மாதமிது.