சனி ஆயுள் காரகன். செவ்வாய் சனிக்கு எதிர்மறையானவன். பெரும்பாலும் கோர விபத்துகளைப் பார்த்தால் சனி, செவ்வாய் சேர்க்கை, சனியை செவ்வாய் பார்ப்பது, சனி செவ்வாய் ஒரே இடத்தில் இருப்பது போன்றவற்றால் நடந்ததாக இருக்கும்.
தண்டவாளம், இரும்பு, ரயில் பெட்டி போன்றவை சனியுடைய வாகனம். இதற்கு ராகுவின் தொடர்பும் உண்டு. ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு கிரகங்களை சொல்லலாம்.
சனி எந்த வீட்டில் உட்கார்ந்திருக்கிறது என்பதை கணித்து எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில் விபத்து நேரிடும் என்பதைக் கூட கணிக்க முடியும்.
விபத்துகள் இந்தியாவின் ஜாதகத்தைப் பொருத்து அமையும். ஆனால் உயிரிழப்புகள் தனி மனிதர் ஜாதகத்தைப் பொருத்தே அமையும்.
அதாவது ஒரு ரயிலின் 4 பெட்டிகள் சேதமடைந்திருந்தால், அதில் ஒரு பெட்டியில் மட்டும் 4 ஏழரை சனி நடப்பவர்கள் ஏறியிருந்தால் அந்த பெட்டி மட்டும் பற்றிக் கொண்டு எறியும்.
விபத்து என்பது ஒவ்வொரு நாட்டின் சுதந்திரம் அடைந்த ஜாதகத்தை வைத்து சொல்ல முடியும். நாடளவில் விபத்தை தவிர்க்க முடியுமா என்று கேட்டால், முயற்சி செய்யலாம்.
ஆனால் தனி நபருக்கு என்றால், அவர்களுக்கு சொல்லி அனுப்புகிறோம். கொஞ்ச நாளைக்கு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்து பொது வாகனத்தில் அதாவது பேருந்து, ரயில் போன்றவற்றில் போங்கள் என்று சொல்கிறோம்.
பேருந்து, ரயிலில் போனால் கூட, கோர விபத்துகள் நேரிடும். ரத்த இழப்பு ஏற்படும். காலில் இரும்பு கம்பி எல்லாம் வைக்கும் நிலை ஏற்படும். எனவே நீங்கள் கொஞ்சம் ரத்த தானம் கொடுத்து விடுங்கள் என்று கூறுவோம்.
ஒரு வேளை அவருக்கு சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு இருந்தால், ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு ரத்த வங்கியில் இருந்து ரத்தம் வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்று கூறுகிறோம்.