Publish Date: Sat, 14 Mar 2026 (17:38 IST)
Updated Date: Sat, 14 Mar 2026 (17:40 IST)
கடலூரை சேர்ந்த தேவா, ஜீவா என்கிற சகோதர சிறுவர்கள் Talk with dev என்கிற இன்ஸ்டாகிராம் சேனலை நடத்தி வருகிறார்கள். ஹாய் கய்ஸ்.. நான் உங்கள் தேவா.. தேங்க்யூ.. என அவர்கள் போடும் வீடியோ பிரபலம். இந்த சிறுவர்களுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். 10 லட்சம் ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ள இந்த சிறுவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அவருடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிட்டிருக்கிறார்கள். அதோடு, அவர்களுடன் உரையாடும் வீடியோவை முதல்வர் ஸ்டாலினும் வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் எல்லாத்துக்கும் உங்க அட்வைஸ் சொல்லுங்க சார் என்ன சிறுவர்கள் கேட்க நல்லா ரீல்ஸ் போடுறீங்க தம்பி.. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. ஆனா ரீல்ஸ் போடுறதோடு நின்னுடாம நல்லா படிக்கணும்.. நீங்க ஆசைப்பட்ட மாதிரி கலெக்டர், போலீஸ் அதிகாரி ஆகணும்.. அதுக்கு என்னுடைய வாழ்த்து என ஸ்டாலின் அதில் பேசியிருக்கிறார். இந்த வீடியோவை கிட்டத்தட்ட பல லட்சம் பேர் லைக் செய்து இருக்கிறார்கள்.
இந்த சிறுவர்கள் ஏற்கனவே பிரபுதேவா, பார்த்திபன், சாய் அபயங்கர் ஆகியோரை சந்தித்து ரீல்ஸ் வீடியோக்களை போட்டிருந்தனர். இந்நிலையில், ராமதாஸ் தேவாவும், ஜீவாவும் படிக்கும் கடலூர் நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு தலைமை ஆசியர், ஒரே ஒரு ஆசியர் மட்டுமே இருக்கிறார். ஆசியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படி படிப்பார்கள் முதலமைச்சரே? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Mahendran
Publish Date: Sat, 14 Mar 2026 (17:38 IST)
Updated Date: Sat, 14 Mar 2026 (17:40 IST)