Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருந்தக் கூடிய ஜாதகங்கள் எவைக்கு எவை?

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2007 (12:27 IST)
பொருந்தக் கூடிய ஜாதகங்கள் எவைக்கு எவை? தொழில் செய்ய, பங்குதாரராக ஆகியவற்றுக்கு கூறுங்கள்.

ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்

எந்த ஒருவர் ஜாதகத்திலும் அந்த ஜாதகத்தில் எந்தக் கிரகம் பலம் பெற்றுள்ளது என்பதை அடையாளம் காண வேண்டும். அறிவியிலில் இயங்கு தசை, இயக்கு தசை என்று இருப்பது போல, கிரகங்களிலும் ஒருவருடைய ஜாதகத்தில் இயங்கும் கிரகம், இயக்கும் கிரகம் என இரு பிரிவுகள் காணப்படும்.

உதாரணத்திற்கு ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். அதனை இயக்கும் உரிமையாளர் சுக்கிரன் அவருடைய ஜாதகத்தில் பலவீனமாக காணப்பட்டாலோ அல்லது சுக்கிரன் வலிமையாக இருந்து அதை விட வலிமையாக அதன் எதிர் கிரகமான குரு காணப்பட்டாலோ அவரிடம் ரிஷப ராசிக்கான குணங்கள் குறைவாகக் காணப்படும்.

இயக்கும் கிரகம் எந்த ராசிக்கு உரிமையானதோ அந்தக் குணம் அவரிடம் காணப்படும். எனவே பொருத்தங்களை மிக துல்லியமாகப் பார்க்க வேண்டும்.

மேலோட்டமாக மேஷத்திற்கு, கடகம் நட்பு, ரிஷபம் - கன்னி நட்பு, மிதுனம் - சிம்மம் நட்பு என்று பார்த்து பங்குதாரர்களையோ வாழ்க்கைத் துணையையோ அமைத்துக் கொள்ளாமல் அவரவர்கள் பிறந்த ராசிநாதனின் பலம், லக்னாதிபதியின் பலம் என ஆராய்ந்து வியாபார பங்குதாரர்களையோ, வாழ்க்கைத் துணையையோ அமைத்துக் கொண்டால் அது நீடித்து நிலைக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments