Publish Date: Mon, 02 Mar 2026 (11:16 IST)
Updated Date: Mon, 02 Mar 2026 (11:18 IST)
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் எனத்தெரிகிறது. எனவே, அரசியல்கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பணிகளில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. இன்று காலை விடுதலை சிறுத்தை கட்சியுன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது:
நாங்கள் திமுகவுன் பேரம் பேசவிலலி. ஆட்சியில் பங்கும் கேட்கவில்லை. அதிகார பகிர்வு பற்றி மட்டுமே பேசியிருக்கிறோம்.. இரண்டும் வேறு வேறு.. எங்களுக்கான தொகுதி எண்ணிக்கையைத்தான் அதிகார பகிர்வு என சொல்கிறேன்.. எங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் கூறுவதாக திமுக குழுவினர் கூறியிருக்கிறார்கள்..
தமிழ்நாட்டில் மோடி வித்தை எடுபடாது.. தமிழ்நாடு வேறு.. மற்ற மாநிலங்கள் வேறு..
நடக்கவிருப்பது வழக்கமான சராசரியான தேர்தல் அல்ல.. வலதுசாரி கட்சிகளை காலூன்ற விடக்கூடாது என்பதற்கான தேர்தலாக இது நடக்கவுள்ளது. திமுகவுடன் பேரம் பேசும் கட்சியாக நாங்கள் இருக்க மாட்டோம்.. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து நாங்கள் திமுகவுடன் பேச வில்லை.. எண்ணிக்கை முடிவான பிறகு தொகுதிகளின் நிலவரம் குறித்து முழுமையாக தெரியவரும்..புதுச்சேரியிலும் போட்டியிட திமுகவுடன் தொகுதிகளை கேட்டிருக்கிறோம்... மாநிலங்கள் அவை சீட் கேட்கவில்லை என்று கூறினார்.
மேலும், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தாலும் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இருக்கிறது.. அது பற்றி நாங்கள் கருத்து சொல்ல முடியாது என சொல்லியிருக்கிறார்.