Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவெகவுக்கு ஆதரவு இருக்கு!. திமுக கூட்டணில் குண்டு போடும் கிரிஷ் சோடங்கர்

Advertiesment
rahul
தவெகவை தொடர்ந்து காங்கிரஸ் பெருமையாக பேசி வருவது திமுக வட்டாரத்தில் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை கடந்த பல தேர்தல்களாகவே காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்துதான் தேர்தல்களை சந்தித்து வருகிறது. ஆனால் திடீரென ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை காங்கிரஸ் வைத்தது.
ஒருபக்கம் ஏற்கனவே ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என சொன்ன விஜயின் தவெகவிடம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது.. இது திமுக தரப்புக்கு பிடிக்கவில்லை..

மேலும், தவெக தனித்துப்போட்டியிட்டாலே 18 சதவீத வாக்குகளை பெறும் என தமிழக காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி பேட்டி கொடுதார். ஒருபக்கம் மாணிக்கம் தாகூர் எம்.பி ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பதை தொடர்ந்து பேசினார். இப்படி, திமுகவுக்கு எதிராக பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்பி ஆகிய பேசியதற்கு காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காதது திமுகவுக்கு கோபத்தையும், அதிருப்தியையும் கொடுத்தது.

இத்தனைக்கும், திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் காங்கிரஸுக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தமுறை காங்கிரஸுக்கு 25 தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா தொகுதியையும் கொடுக்க திமுக முன்வந்திருக்கிறது. ஆனால் நேற்று செய்தியாளிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திமுக கொடுப்பதாக சொல்லியிருக்கும் 25 + 1 தொகுதிகளை ஏற்க முடியாது என சொல்லியிருந்தார்.

அதோடு தவெகவுக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது எனவும் கூறினார்.. இதுதான் மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. தவெகவை தொடர்ந்து காங்கிரஸ் தரப்பு பெருமையாக பேசி வருவது திமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவுடன் பேசியிருக்கிறோம்!.. பேரம் பேசவில்லை!.. திருமாவளவன் பேட்டி..