Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்.12ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2007 (10:49 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த ி வரும் செப்டம்பர ் மாதம ் 12-ந் தேதி இந்தியா முழுவதும் வேல ை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து டெல்லி மாநி ல வங்கி ஊழியர்கள் பேரவையின் இணைச் செயலாளர் ராமானந்த் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓய்வூதியம், ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது, வங்கி பணிக்கு மீண்டும் ஊழியர்களை தேர்ந ்த ெடுப்பது, வெளி ஆட்களிடம் பணியை ஒப்படைப்பதை தவிர்ப்பது ஆகிய 4 கோரிக்கைகள் தொடர்பாக முன்பு உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் உடன்பாட்டில் இருந்து நிர்வாகம் பின்வாங்கி விட்டது.

இந்த நிலையில், வங்கி ஊழியர்கள் ஐக்கிய அமைப்பின் (யு.எப்.பி.இ) கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் வருகிற செப்டம்பர் 12-ந் தேதி ஒரு நாள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஐக்கிய வங்கி ஊழியர்கள் அமைப்பில் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் உள்ளனர். வங்கி அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்ட 4 தொழிற்சங்கங்கள், ஊழியர்களை உறுப்பினர்களாக கொண்ட 5 தொழிற்சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த அனைவரும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள ் என்று ராமானந்த் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments