Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மடலேறும் தமிழர்களின் மகாத்மியங்கள். . .

Webdunia
இணையத்தின் மிகமுக்கிய விவாத களங்களில் ஒன்று செய்திக்குழுக்கள் ( newsgroup s) விவாத அரங்கங்கள ், பிரபல சர்ச் எஞ்சினான கூகிளுக்குச் சென்றால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான விவாதமேடைகளை நீங்கள் பார்க்கலாம். அவற்றில் soc.culture.tami l என்கிற விவாத அரங்கம் முழுக்க தமிழ ், தமிழர்கள் சம்பந்தமான பொதுவான விவாதங்கள் நடக்கும்.

அநேகமாக நீங்கள் இதுபோன்ற விவாதமேடைகளில் பங்கெடுத்திருக்கலாம். இந்த விவாதமேடைகள் யாஹூ க்ரூப்கள் போல. ஏதோ ஒருவிஷயத்தில் ஒத்த கருத்து இருப்பவர்கள் சேர்ந்து நடத்தும் விவாதங்கள் அல்ல. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் விவாதம் செய்ய வழியுள்ள பொது இடங்கள ், அதுவும் சைபர் வெளி இல்லைய ா?

செ.ச.செந்தில்நாதன்

நிறைய முகமூடி மனிதர்களை soc.culture.tami l போன்ற அரங்குகளில் காணலாம். அவர்கள் மிகமிக சூடாக விவாதிப்பார்கள ், புனைப்பெயரில் தோன்றும் இவர்களின் வார்த்தைகள் மிக பச்சைபச்சையாகவும் இருக்கும்.

இணையத்தில் தீவிரமாக விவாதங்களில் ஈடுபடும் தமிழர்கள் என்ன விஷயங்களையெல்லாம் விவாதிப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள ்?

இது வரை செய்திக்குழுக்களில் ( newsgroup s) அனுபவம் இல்லாதவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் உங்களிடம் ஒரு போட்டியே கூட வைக்கலாம். அவர்கள் என்னவெல்லாம் விவாதிப்பார்கள ்? அவர்கள் அரசியல ், சினிம ா, பொது விஷயங்களைத்தான் விவாதிப்பார்கள். ஆனால் பெரும்பாலான விவாதங்களோ மிகவும் தரம்கெட்டவையாக இருக்கின்றன.

மிக அதிக அளவில் தமிழ் செய்திக்குழுக்களில் விவாதிக்கிற விஷயங்கள் - தமிழ் ஈழப்பிரச்னை. இந்தியாவில் உள்ள இனப்பிரச்னை. அல்லது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர் பிரச்னை. அவ்வப்போது தி.மு.க. - அ.தி.மு.க. மோதல ், காவிரி பிரச்ன ை, ஆட்சி மொழி பிரச்ன ை, வீரப்பன் விவகாரம். . . விவாதங்களுக்கான களம் இவைதான். என்னவோ தமிழர்களுக்கு இவற்றைவிட்டால் வேறு பிரச்னைகளே இல்லை என்பதுபோல. . .

இந்த பிரச்னைகளையும் நிதானத்தோட ு, காரண காரியங்களோடு விவாதிக்க இணையத்தில் யாரும் காணப்படவில்லை. நூற்றுக்கு தொண்ணூற்றியொன்பதே முக்கால் வீதம் முகமூடிக்காரர்களால் நடத்தப்படும் இந்த விவாதங்கள் ஒரு சைபர் கோல்ட்வார் போல இருக்கிறது. புலிகளை ஆதரிப்பவர் பிரபாகரன் ரசிகர் மன்றத் தலைவரைப் போல பேசுகிறார ், எதிர்ப்பவர் சந்திரிகா குமாரதுங்காவின் மச்சானைப் போல பேசுகிறார்.

பிரமாதமான ஆங்கிலத்தில் தமிழைத் திட்டுகிறார்கள் அல்லது ஆங்கிலத்தை ஒழித்துக்கட்ட அறைகூவல் விடுக்கிறார்கள ், சைபருலக பிராமணர்களோ பிராமணரல்லாதோர் இயக்கம் பற்றி 60 ஆண்டுகளுக்கு முந்தைய எதிர்ப்பிரச்சாரங்களை மீண்டும் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.

தாமே புதுப் பிராமணராகிக் கொண்டிருக்கும் பிராமணரல்லாத இளைஞர்களோ தி.க.காரர்களை விட மிகத் தீவிரமாக பேசுகிறார்கள். அவ்வப்போது காவிரிப் பிரச்ன ை, வீரப்பன் பிரச்னை வரும்போது தமிழர்களின் பத்து பஞ்சமாபாதகங்களை பட்டியலிட்டு ஒரு கன்னட மாவீரன் (முகமூடிதான்) soc.culture.india.karnatak a விலிருந்து ஒரு மெயிலை ஃபார்வர்ட் செய்வார். மேற்சொன்ன இந்த தலைப்புகளிலான விவாதங்கள் என்றென்றும் முடிவடையாத சித்தி சீரியலைப் போல இழுத்துக் கொண்டே போகும்.

இதற்கெல்லாம் நடுவில் தமிழ் படிக்க விரும்புகிறேன் என்று சொல்லி யாரோ ஒரு இண்டாலஜிஸ்ட் ஆஸ்திரியாவிலிருந்து கேட்டிருப்பார். அதற்கு பதில் சொல்லவே ஆளிருக்காது. ஆனால ், வடக்கத்தியான் முட்டாள ், தெற்கத்தியான் புத்திசால ி, பெங்காலிகள் சூப்பர் ரேஸாக்கும் என்பது போன்ற தலைப்புகளில் தீவிர விவாதங்கள் நடக்கும்.

வீரப்பன் விவகாரங்களில் தமிழனை தாக்கும் ஹொய்சள வீரனும் தமிழ் சினிமாவை ஜிகினா என்று மெயிலிங் லிஸ்ட்டில் திட்டிவிட்டு மறக்காமல் அதைப் பார்க்கும் சேர நாட்டு மறவர்களும் தமிழ் தீரர்களோடு சேர்ந்து வடநாட்டவர்களைப் பற்றி கிண்டலடிப்பார்கள். இவர்களில் 90 சதவீதத்தினர் கலிபோர்னியாவிலிருந்தும் கனடாவிலிருந்தும்தான் இப்படி கல்லடிக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டும்.

ஆனால் இவர்கள் இணையம் தந்திருக்கும் அற்புதமான வாய்ப்பை வீணடிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நமது தற்கால சமூகம் பேசவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. முக்கியமாக தமிழர்கள் - குறிப்பாக தமிழ்நாட்டு தமிழர்கள் - அதிகம் இணைய விவாதங்களில் ஈடுபடாததினால்தானோ என்னவோ தமிழ்நாட்டின் முன்னேற்றம் பற்றி யாரும் விவாதிப்பதில்லை.

இன்று நமது அரசியல் சூழல் ஏன் வரலாறு காண முடியாத அளவுக்கு தாழ்ந்திருக்கிறத ு? நமது தானைத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெள ி? மக்கள் ஏன் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்காமல் டி.வி. சீரியல ், வாஸ்த ு, சாதி சங்கம் என கெட்டலைகிறார்கள ்?

பக்கத்தில் சந்திரபாபு நாயுடும் கிருஷ்ணாவும் மாநிலத்தின் மேம்பாடுகளைப் பற்றி தீவிரமாக செயல்படும் நேரத்தில் நாமோ அடிமை முதல்வர் ஒருவரை வைத்துக் கொண்டிருக்கிறோம். இதனால் மாநிலத்தின் வளர்ச்சி எப்படி பாதிக்கிறத ு? ஆப்கன் யுத்தம் நமது வாழ்க்கையை எப்படி பாதிக்கும ்? இந்த விஷயங்களை பற்றி விவாதிக்க யாரும் இல்லை.

சைபர்வெளிக்கு நாட ு, மொழ ி, இன பேதம் கிடையாது என்று சொல்லப்பட்டாலும ், ஒவ்வொரு நாட்டுக்கும் மொழியினருக்கும் இனத்துக்கும் ( சில சமயங்களில் ஜாத ி, குலம ், கோத்திரத்துக்கும் ) தனித்தனி விவாத அரங்குகள் இருக்கின்றன. அங்கே அவரவர் தங்களுக்குள் குசுகுசுத்துக்கொண்டு கிடக்கிறார்கள்.

நாலு பேர் சேர்ந்து ஒரு விஷயத்தை விவாதித்து முடிவெடுக்கும் போக்கைவிட ஒரு பிரச்னையை நாலா பக்கமும் இழுத்து சிதறடிக்கும் போக்கே அவர்களின் மின்மடல்களில் தெரிகிறது.

அப்படியென்றால ், மனிதர்கள் - தமிழர்கள் - மாறவே மாட்டார்கள ா? என்னதான் தொழில்நுட்ப வரப்பிரசாதம் கிடைத்தாலும் அதை புதுமைக்கு பாலமாக மாற்ற மாட்டார்களா என்கிற ஆதங்கம் எழுகிறது.

அது கிடக்கட்டும். நல்லதே நடக்கவில்லையா என் ன? நடக்கிறத ு, குறிப்பாக தமிழில் தகவல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த விரும்பும் ஆர்வலர்கள் நடத்தும் மெயிலிங் லிஸ்ட்கள ், யாஹூ குழுக்களில் உருப்படியான விவாதங்கள் நடைபெறவே செய்கின்றன.

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மையத்தின் (< www.infitt.org>) விவாதக்குழுக்களில் தமிழில் தகவல் தொழில்நுட்ப சொற்களை எப்படி மொழிபெயர்ப்பது என்பது போன்ற விவாதங்கள் நடக்கின்றன. தமிழில் லீனக்ஸை கொண்டுவரும் வேலையிலுள்ள நண்பர்கள் விவாத மேடைகளில் பங்கேற்கிறார்கள்.

அதைப் போலவ ே, 2000 ஆண்டுகால தமிழ் கலை இலக்கிய மரபை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கும் ப்ராஜெக்ட் மதுரை << www.tamil.net/projectmadurai>>, தமிழ் மரபு போன்ற கூட்டமைப்புகளின் விவாத மேடைகளிலும் உருப்படியான செயல்பாடுகள் நடக்கவே செய்கின்றன.

ஆனால் தமிழக பொருளாதாரம ், அரசியல ், மேம்பாடு போன்ற விவாதங்கள் அவசியமாகத் தேவைப்படுகிற துறைகளில் - அதாவது ஆக்கபூர்வமான விவாதங்கள் - மின்குழுக்கள் எதுவும் காணப்படவில்லை.

வழக்கம்போல பெரும்பாலுமான தமிழர் மடற்குழு விவாதங்கள் ஆங்கிலத்திலேயே நடக்க தமிழ்நெட் அகத்தியர் குழு போன்ற அரங்குகளில் தமிழிலேயே விவாதங்கள் நடந்துவருகின்றன. சமீபத்தில் மலேசியாவில் வெளியான ஒரு புத்தகத்தைப் பார்க்க நேரிட்டது.

இணையத்தில் ஜேய்பி என்கிற அந்த நூல் மலேசியத் தமிழர்களிடம் பிரபலமான எழுத்தாளரான டாக்டர் ஜெயபாரதியின் மின்னஞ்சல் குழுக்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அநேகமா க, இந்த மாதிரியிலான தொகுப்பு தமிழில் இதுதான் முதல் என்று நினைக்கிறேன்.

அவர் பங்குபெற்றிருந்த அகத்தியர் என்கிற மடற்குழுவின் அடிப்படை நோக்கம் தமிழ் சமூகவியல ், வரலாற்ற ு, மொழி ஆய்வுகள் எனத் தெரிகிறது. டாக்டர் ஜெயபாரதியின் மடல்களின் தொகுப்பில் மிகவும் சுவாரஸ்யமான விஷயங்கள் காணக் கிடைத்தன.

அவர் மலேசியாவிலிருந்து எழுதுவதால ், தென்கிழக்காசிய நோக்கில் தமிழ் வரலாற்று பார்வைகள் அறிமுகமாயின. அவரை அவரது நண்பர்கள் இணையத்திலுள்ள கிராமத்து பெரிசு என்று அழைக்கிறார்கள்.

நூலில் பல கட்டுரைகள் அப்படியே மெயிலிங் லிஸ்ட்டிலிருந்து பிரதியெடுத்து மின் அஞ்சல் ஹெடர்களோடு பதிப்பிக்கப்பட்டிருப்பதால் நூல் முழுக்க மின்வாசனை அடிக்கிறது. ( அப்பாட ா, கடேசியில் என் கட்டுரைத் தொடருக்கான பெயருக்கு ஒரு ஜஸ்டிபிகேஷன் கண்டுபிடித்துவிட்டேன். தமிழ் சினிமாக்காரர்கள் தங்கள் பட டைட்டிலுக்கு பாடாய்ப்படுவதைப் போல பட்டுத்தீர்த்துவிட்டேன் இதுவரை. )

தமிழர்களின் தற்கொலைப் பழக்கம ், வீரக்கல ், எம்டன ், கங்கை கொண்ட சோழபுரம ், நேதாஜி பற்றி மலாய் தமிழர்களிடையே உள்ள கட்டுக்கதைகள ், சாமுத்திரிகா லட்சணமும் திருமலைநாயக்கரின் திருவாட்டியார் தொடையிலிருந்த வடுவும ், ஈழத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் முன்பு எப்போதோ இருந்த நிலப்பாலத் தொடர்ப ு, கல்லாடம ், இந்தோனேசியாவின் கரன்சியில் விநாயகர் படம் காணப்படுவதின் ரகசியம் என அடுக்கடுக்காக பல விஷயங்களை ஒரு கோஷ்டி அலசித் தீர்த்திருக்கிறது.

ஜெயபாரதியின் நடை மிகப் பிரமாதம். குறிப்பாக மலேசிய - சிங்கை தமிழ் நடை என்றொன்று வாய்த்திருப்பது இந்த மின்னாடல்களின் போது நன்றாக தெரிகிறது. நேதாஜி இறந்ததை நம்ப மறுக்கும் ஒரு மலாய் தமிழனின் பேச்சாக ஜெயபாரதி எழுதியிருப்பதைப் பாருங்கள். . .

` அவுரு செத்தத யாருனாச்சும் பார்த்தாங்கள ா? இல்ல பாத்தவுங்கல பாத்தவனுவ இருக்கானுங்கல ா? இந்த வெல்லக்கார பசங்க செஞ்ச வேலங்க அது. இந்த நேருவும் பதவிக்கு ஆசப்பட்டு சரி சரின்னுட்டாருல. அந்த நேருவே செத்தாப் ப, நேத்தாசி தீபேத்துக்காரரா வேசங்கட்டி வந்திருக்கார ு, அவர யாருனாச்சும் கொல்ல முடியுங்கல ா? அவரு பெரிய யோகீசுபரருங்கய்ய ா, மாயமா மறஞ்சுருவார ு, வேற லெக்குல தீடிருனு தோணுவார ு, எப்படி அவுரு ஈந்தியாவுலேர்ந்து மறஞ்ச ி, ரசியா வழியாகவே போய ி, இட்டுலர பார்த்த ு, கையக் குடுத்தவருங்க. சர்மன்லர்ந்து கடலுக்கடீலேயே மறஞ்ச ி, மறஞ்ச ி, மறஞ்ச ி, அப்புடியே சப்பானுக்குப் போய ி, ஈரோயித்தோவப் பார்த்தவருங்க. இத பாருங் க, ஈரோயித்தோவ நேராக்க நின்னு பார்க்க முடியாத ு, தெரியுங்கலா. . . '

இப்படியா போவுது அந்த ரப்பர் எஸ்டேட் தமிழனின் பேச்சு. இதுவும் கிடக்கட்டும ், இதுவரை நான் எவ்வளவோ மெயிலிங் லிஸ்ட் மெயில்களை பார்த்திருக்கிறேன். ஆனால் என்னால் மறக்கவே முடியாத மெயில் ஒன்றே ஒன்றுதான்.

அது அப்படியே இன்றைய தமிழ் சமூகத்தை பிரதிபலிக்கும் ஒரு மடல். தன் மகனைப் பார்க்க அமெரிக்கா போயிருந்த ஒரு தமிழ் அடிஅ-இன் தீராத தாகத்தைக் காட்டும் மடல். படிக்கிறீங்களா. . . ( இந்த மடலை ளடிஉ.உரடவரசந.வயஅடை இல் போட்டவரின் பெயரை நாம் பிரசுரிக்க விரும்பவில்லை. சராசரி தமிழன் என்பதே அவரது பெயர் என்று வைத்துக் கொள்வோமே! )

My mom is visiting me in the US and desperately wants to keep up to date with the latest happenings in CHITHI tamil serial on Sun TV. I don't have access to Sun TV here (have DishNetwork). Is there any website which provides updates of recent episodes of Chitti? Thanks for any info. My mom will be thrilled!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments