Publish Date: Fri, 20 Feb 2026 (11:01 IST)
Updated Date: Fri, 20 Feb 2026 (11:06 IST)
விஜயகாந்துடன் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் காரணத்தால் 2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போனார் வடிவேலு. திமுகவுக்கு ஆதரவாக என சொல்வதை விட விஜயகாந்தை திட்டுவதற்காக அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் திமுகவுக்கு ஆதரவாக என்றால் அவர் அதிமுகவை எதிர்த்து பேசியிருக்க வேண்டும். அப்போது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதா பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் எல்லா இடங்களிலும் விஜயகாந்தை மட்டுமே மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசினார் வடிவேலு..
அதை விமர்சனம் என்றும் சொல்ல முடியாது.. தனிப்பட்ட தாக்குதலை தொடுத்தார் வடிவேலு.. அவன் ஒரு குடிகாரன்.. உளறுவான்.. பேசுவதே புரியாது.. அவன் ஒரு லூசு என்றெல்லாம் பேசினார் வடிவேலு. அவர் பேசியதற்கு விஜயகாந்த் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. வடிவேலுவை நேரில் பார்க்க மக்கள் கூட்டம் கூடியது. ஆனால் அந்த தேர்தலில் திமுக வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற விஜயகாந்தின் தேமுதிக 29 இடங்களை வென்றது. திமுகவை விட அதிக இடங்களை வென்றதால் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார்..
விஜயகாந்த்தை திட்டியதால் திரையுலகமே வடிவேலுவை ஒதுக்க துவங்கியது.. எனவே பல வருடங்கள் சினிமாவில் வடிவேலு நடிக்கவில்லை.. கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் வடிவேலு திமுகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.. திமுகவின் சில பொது கூட்டங்களிலும் கூட அவர் கலந்து கொண்டு பேசினார்.
ஆனால் வடிவேல் இப்படி கடுமையாக விமர்சித்த விஜயகாந்தின் தேமுதிக கட்சியோடு திமுக தற்போது கூட்டணி அமைத்திருக்கிறது. இது வடிவேலுவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் எது அரசியல்? எதை எப்படி செய்ய வேண்டும்? என்பது அரசியல்வாதியான முக ஸ்டாலினுக்கு தெரியும்.. இதுதான் அரசியல்.. அரசியலை இப்படித்தான் செய்ய வேண்டும். இந்த அரசியல் வடிவேலுவுக்கு புரிய வாய்ப்பில்லை. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை.. எதிரியும் இல்லை...
தேமுதிக - திமுக கூட்டணி வெளியானவுடனேயே வடிவேலு தலைமறைவு என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..