Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 வருடங்கள் கழித்து பாலில் விழுந்த பழம்!.. முதன்முறையாக திமுகவுடன் இணைந்த தேமுதிக!..

Advertiesment
dmdk

Mahendran

, வியாழன், 19 பிப்ரவரி 2026 (11:15 IST)
யாரும் எதிர்பார்க்காத வகையில் முதன் முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக இதுவரை யாருடனும் கூட்டணி அமைக்காமல் இருந்தது. 20 தொகுதிகள்,  ஒரு ராஜ்ய சபா சீட் என பிரேமலதா டிமாண்ட் வைத்ததால் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பின் கொஞ்சம் இறங்கி வந்து 10 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் கேட்டது தேமுதிக. எனவே, பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

ஒருபக்கம், காங்கிரஸ் முரண்டு பிடித்து வருவதால் தேமுதிக கூட்டணிகயை கொண்டு வரும் முயற்சியில் திமுக இறங்கியது. இந்நிலைய்ல்தன, இன்று காலை பிரேமலதா விஜயகாந்த் தனது சகோதரருடன் அறிவாலயத்திற்கு சென்று திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்தார். இதன் மூலம் தேமுதிக திமுக கூட்டணியில் இணைவது உறுதியானது.

2005ம் வருடம் கட்சி துவங்கிய விஜயகாந்த் 2006ம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்துப்போட்டியிட்டார். அதன்பின் 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுகவை விட அதிக எம்.எல்.ஏக்களை பெற்று எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார் விஜயகாந்த். அதன்பின் 2016ம் வருடம் விஜயகாந்தை திமுக கூட்டணியில் கொண்டுவர கலைஞர் கருணாநிதி விரும்பினார்.

அதனால்தான் ‘பழம் நழுவி பாலில் விழுகிறது’ எனவும் சொன்னார். ஆனால், விஜயகாந்தோ மக்கள் நலக்கூட்டணி என்ற ஒன்றை அமைத்து தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. மேலும், விஜயகாந்துக்கு ஒரு எம்.எல்.ஏ கூட கிடைக்கவில்லை. கடந்த 10 வருடங்களாக தேமுதிகவில் யாரும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில்தான், திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது தேமுதிக.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவுடன் இணைந்த தேமுதிக.. எவ்வளவு சீட்?.. பரபர அப்டேட்...