Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணைய செல்போன்களுக்கு மவுசு அதிகரிப்பு

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (17:47 IST)
செல்போன்களிலேயே இணையதள சேவை ( Internet) கிடைப்பது தற்போதைய காலங்களில் அதிகரித்து வரும் நிலையில், இந்தவகை போன்களுக்கு அதிக வரவேற்பு எதிர்வரும் காலங்களில் ஏற்படும் என்று சிப் தயாரிப்பு நிறுவனமான இண்டெல் கணித்துள்ளது.

அடுத்த 4 ஆண்டுகளில் அதாவது 2012-ல் இணையதள வசதி கொண்ட செல்போன்களின் எண்ணிக்கை 1.2 பில்லியன் ஆக உயரும் என்று இண்டெல் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இணையதள சேவை தரும் செல்போன்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அதனை எதிர்கொள்ளும் தொழில்நுட்பம் இண்டெல் நிறுவனத்திடம் உள்ளதாகவும் அதன் உயர் அதிகாரியை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணைய தளத்தை எல்லா நேரங்களிலும் மக்கள் விரும்புவதாகவும், எங்கிருந்தும், எந்த நேரத்திலும் இணையதள உபயோகத்தை வாடிக்கையாளர்கள் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதியவகை மொபைல் போன்களுக்கும், மிகவும் அதிநவீன இணைய இணைப்பைக் கொண்டிருக்கும் சாதனங்களுக்கும் தேவை அதிகம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments