கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில், விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்த ஆறு பாலா, விஜய்யின் அரசியல் குறித்து பேசியுள்ளது வைரலாகியுள்ளது.
இதுகுறித்து நடிகர் ஆறு பாலா பேஸ்புக்கில் இட்டுள்ள பதிவில் “சர்கார் படம் சூட்டிங்லே என் படத்தை எந்த தியேட்டர்ல பார்ப்பீங்கனு கேட்டாரு .. உதயம் தியேட்டர்ல பார்ப்பேன் சார் சொன்னே.. லேசாக சிரித்து விட்டு. நான் அரசியலுக்கு செட்டாவேனா கேட்டாரு.. நான் சிரித்த படி நீங்கள் அரசியலுக்கு செட்டாக மாட்டீங்க சார் சொன்னே. ஒரு நொடி என் முகத்தை உண்ணிப்பாக கவனித்து விட்டு ஏன் அப்படி சொல்றீங்க கேட்டாரு..
உங்க மேல கொலை கேஸ் இல்லை.. உங்க மேல கற்பழிப்பு வழக்கு இல்லை.. உங்ககிட்ட சாராய பேக்டரி இல்லை.. உங்க மேல கட்ட பஞ்சாயத்து கேஸ் இல்லை ..
கோடி கணக்கில் கொள்ளை அடிக்கிற மெடிக்கல் காலேஜ் இல்லை.. உங்ககிட்ட ரவுடிசம் பண்ண ஆள் இல்லை. இது எதுவுமே உங்ககிட்ட இல்லை அதனால் நீங்க அரசியலுக்கு செட் ஆக மாட்டீங்க சார் சொன்னே..
லேசாக சிரித்து விட்டு மக்களுக்கு நல்லது செய்ய இதெல்லாம் தேவை இல்லையே நண்பா என்றார். ரொம்ப சென்சிட்டிவ் ஆன மனிதன்.. இப்படி ஒரு நிகழ்வு அவர் மனதை மீளா துயரத்திற்கு கொண்டு சென்று இருக்கும். உயிர் இழந்த ஆண்மாகளுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K