ஒரு மாஸ் நடிகர் அரசியல் தலைவராகும்போது, அவர் மக்களை நேரில் சந்திக்க சென்றால் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்படும் என்றும், அதிலே ஏதாவது விபரீதம் நடந்தால் அந்த தலைவரின் மீது தான் மொத்த பழியும் விழும் என்பதால் தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றும் சமூக வலைதளத்தில் ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விஜய்க்கு கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் தான் இது போன்ற அசம்பாவிதம் நிகழ்வதாக கூறப்படுகிறது. ரஜினி அரசியலுக்கு வராததற்கு பல காரணங்கள் இருந்தாலும், இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று அவர் மக்களை சந்திக்க நேர்ந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்; அதனால் ஏதேனும் விளைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. மக்களை அப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு ஏற்படுத்த விரும்பவில்லை என்பதால் தான் ரஜினி அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார் என்றும் சமூக வலைதளங்களில் ரஜினியின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், மக்கள் ஊழலுக்கு பழகிவிட்டார்கள் என்றும், காமராஜரை தோற்கடித்த போதே தமிழகம் ஊழல் அரசியலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது என்றும் தமிழகத்தில் இனி யாராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்படு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.