தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் சமூக வலைதளத்தில் சிலர் இதை அரசியலாக்கி வரும் நிலையில், இன்னொரு பக்கம் உண்மையாகவே பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இந்த நிலையில், விஜய்யின் அடுத்தடுத்த கூட்டங்களுக்கு இதனால் சிக்கல் ஏற்படும் என்றும், அனுமதி வழங்கப்படாது என்றும், அப்படியே அனுமதி வழங்கப்பட்டாலும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே, கரூர் கூட்டம் தான் விஜய்யின் கடைசி கூட்டமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
									
										
			        							
								
																	
	 
	வழக்கம்போல் மீண்டும் விஜய் ட்விட்டரில் இருந்து அரசியல் செய்வாரா, அல்லது நீதிமன்றம் சென்று தடைகளை உடைத்து மீண்டும் மக்களை சந்திப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	ஆனால், அதே நேரத்தில் விஜய் அடுத்தடுத்த கூட்டங்களுக்கு அனுமதி கிடைத்தாலும், மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டு, மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.