கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஐஜி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விசாரணை குழுவில் மூன்று காவல் கண்காணிப்பாளர்கள், இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளர், நான்கு காவல் ஆய்வாளர்கள், மற்றும் 10 உதவி ஆய்வாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு உடனடியாக விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களிடம் நேரடியாக சென்று இந்த குழு விசாரணை செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.